உலகம்

இலங்கையில் ‘தடுப்பூசி விழா’வில் மயங்கிய மக்கள் சுகாதார விதிமுறைகளை மறந்துவிட்டதாக குற்றச்சாட்டு!

இலங்கையில் தடுப்பூசி விழாவின் காரணமாக மக்கள் இப்போது மயக்கமான சூழலில் வாழ்கின்றனர், எனவே அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை அவர்கள் மறந்து விட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடித்து புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் நாம் மேலும் மேலும் கோவிட் வைரஸால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனா டெய்லி மிரரிடம் கூறினார்.

“ஒவ்வொரு நாளும், சுகாதார பிரிவுகளிலும் ஏராளமான கொவிட் நோயாளிகள் பதிவாதகின்றனர். எனினும் மனித வள குறைப்பாடு காரணமாக நோயாளிகளின் தரவுகளை கணினியில் உள்ளிடுவதில் தாமதங்கள் உள்ளன” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதால் தங்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று வராது என்று கண்மூடித்தனமாக நினைத்து கொண்டு மிகவும் கவனக்குறைவாக நடந்து கொள்கின்றனர். இன்னமும் சிறுவர்கள் தப்பூசி போடவில்லை என்பதையும் மறந்து விடுகின்றார்கள்.

பெரும்பாலோர் முகக்கவசம் அணிவதில்லை மஹரகம உள்ளிட்ட பல சில்லறை துணி விற்பனையாளர்கள் நேற்று கூட கடைகளை திந்தனர், மேலும் பலர் அங்கு கொள்வனவில் ஈடுபட்டதை காண முடிந்தது, என்றும் அவர் கூறினார்.

மக்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாத வரை சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் வரை, கொவிட் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்த முடியாதது, எனவும் ரோஹனா மேலும் வலியுறுத்தினார்.

Hot Topics

Related Articles