உலகம்

தலிபான்கள் வெற்றியால் பயங்கரவாதிகள் துணிவுடன் செயல்படும் ஆபத்து – ஐ.நா எச்சரிக்கை!

ஆப்கனில் தலிபான் பெற்ற வெற்றியால், உல கின் பிற பகுதிகளிலுள்ள பயங்கரவாத அமைப்புகள் துணிவுடன் செயல்படும் ஆபத்து உள்ளதாக ஐ.நா., சபை எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., சபையின் பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆப்கனில் தலிபான் பெற்ற வெற்றியை பார்த்து, உலகின் பிற பகுதிகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் துணிவுடன் செயல்படும் ஆபத்து உள்ளது.

உதாரணமாக, ஆப்ரிக்காவின் சாஹல் பிராந்தியத்தில் பயங்கர வாத சவாலை எதிர்கொள்ளும் அளவிற்கு அங்கு பாதுகாப்பு கட்டமைப்பு இல்லை.

இறப்பை நல்ல விஷயமாக கருதி எந்த சூழலிலும் உயிரைக் கொடுக்கும் கும்பல், அது சிறியதாகவே இருப்பினும், அதன் முன் ராணுவம் கூட நிற்க முடியாது.

இதை ஆப்கன் சம்பவம் உணர்த்தியுள்ளது. ஏழு நாட்களில் ஆப்கன் ராணுவத்தினர் மாயமாகி விட்டனர். என்றார்.

Hot Topics

Related Articles