உலகம்

வைரலாகும் ஆப்கான் பெண்ணின் புகைப்படம்!

ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் தலிபான்களின் துப்பாக்கியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் புகைப்படம் வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் தமது அரசாங்கத்தின் அறிவிப்பை நேற்று வெளியிட்டனர்.

எனினும் அந்நாட்டு மக்கள் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆப்கன் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதாகவும் தலிபான்களுக்கு உதவுவதாகவும் கூறி செவ்வாய் கிழமை காபூலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பெண் ஒருவர் தலிபானின் துப்பாக்கியை நேருக்கு நேர் எதிர்த்து நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தி புகைப்படக்காரர் ஜாரா ரஹிமி இந்த படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Hot Topics

Related Articles