உலகம்

‘அண்ணாத்த’ படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

‘தர்பார்’ படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சென்னையில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, பின் ஹைதராபாத், மேற்குவங்கம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றதைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் 27 ஆம் திகதி நிறைவடைந்தது.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ’அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் திகதி படம் வெளியும் என படக்குழு முன்னதாகவே அறிவித்துள்ளது.

Hot Topics

Related Articles