உலகம்

பழைய பதிப்பை கொண்ட ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்ஆப் சேவை விரைவில் நிறுத்தம்

பழைய ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் வெர்ஷன்கள் கொண்ட மொபைல் போன்களில், வரும் நவ., 1ம் திகதிக்கு பின் சேவையை நிறுத்தப்போவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

யாஹூவின் முன்னாள் ஊழியர்களான பிரையன் ஆக்டன் மற்றும் ஜான் ஆகியோரால் 2009ல் வாட்ஸ்ஆப் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்குமுன் பேஸ்புக் தான் இணைய உலகின் சமூக வலைதள ராஜாவாக இருந்தது. வாட்ஸ்ஆப்பின் வருகைக்குப் பின், உலகமே வாட்ஸ்ஆப் மயமானது.

எதிர்காலத்தில் வாட்ஸ்ஆப் பேஸ்புக்கை ஓரங்கட்டும் என எண்ணிய மார்க் சக்கர்பெர்க், வாட்ஸ்ஆப் நிறுவனத்தை 2014ம் ஆண்டு, 19 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார்.

ஒவ்வொரு நாளும் வாட்ஸ்ஆப்-பின் பயனாளர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். தொடர்ந்து, புதுப்புது அப்டேட்டுகளையும் வாட்ஸ்ஆப் வெளியிட்டு வருகிறது.

Hot Topics

Related Articles