உலகம்

வருடாந்தர சித்திரம் மற்றும் கவிதைப் போட்டிகளை முன்னெடுக்கும் கிரிஸ்புரோ

 

நாட்டிற்கு உற்பத்தி திறன் கொண்ட குடிமகனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இலங்கையின் முன்னணி மற்றும் மிகப்பெரிய கோழிப் இறைச்சி தயாரிப்பாளர்களான கிறிஸ்புரோ நிறுவனம்,  முன்னணி நிறுவன ரீதியான பொறுப்பு அணுகுமுறையான சிசுதெரிய திட்டத்தின் கீழ் வருடாந்திர சித்திரம் மற்றும் கவிதை போட்டிகளை ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில் ஆரம்பித்துள்ளது.

கிறிஸ்புரோ ஒட்டுமொத்த ஊழியர்களின் குழந்தைகளது கல்வி மற்றும் பாடங்களுக்கு அப்பால் தமது திறமைகளை மதிப்பீடு செய்வதற்கு வருடம் தோறும் மதிப்பளிப்பதற்காக மேற்கொள்ளப்படும் கிரிஸ்புரோ சிசு தெரிய சித்திரம் மற்றும் கவிதை போட்டிகளை கிரிஸ்ப்ரோ மனித வளப் பிரிவால் ஏற்பாடு செய்யப்படுவதுடன் கிரிஸ்புரோ ஊழியர்களது பிள்ளைகளுக்கு இதில் பங்களிப்பு செய்ய முடியும்.

கிறிஸ்புரோ மனித வள பிரிவின் கூற்றுப்படி இந்த வருட கட்டுரை போட்டியில் 650க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கு சமாந்தரமாக நடைபெறவுள்ள கிரிஸ்புரோ கவிதைப் போட்டியானது கிரிஸ்புரோ குழுமத்திலுள்ள அனைத்து ஊழியர்களுக்கு திறந்த போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் வெற்றியாளர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகளுடன் சான்றிதழ்கள் வழங்கப்படும், மேலும் கிறிஸ்புரோ குழுமம் ஆண்டுதோறும் அச்சிடும் பாடசாலை அப்பியாசப் புத்தகங்களில் வெற்றி பெற்றவர்களது ஆக்கங்கள் வெளியிடும்.

‘கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் ஏற்பட்ட சவாலான சூழல் இருந்தபோதிலும், நாங்கள் மீண்டும் வருடாந்திர சித்திரம் மற்றும் கவிதை போட்டியை வழக்கம் போல் நடத்த முயற்சிக்கிறோம், எங்கள் ஊழியர்களையும் அவர்களின் அன்புக்குரிய குழந்தைகளையும் நாம் தினசரி அனுபவிக்கும் மிகவும் எதிர்மறை மற்றும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகளிலிருந்து காப்பாற்றுகிறோம், மற்றும் அது ஏற்படுத்தும் விளைவுகள், அவர்களின் மனதில் சில நேர்மறையான எதிர்பார்ப்புகள் இருக்க வேண்டும். எனவே, கடந்த வருடங்களைப் போலவே, இந்த போட்டிக்கு எங்கள் குழந்தைகள் மற்றும் எங்கள் ஊழியர்களிடமிருந்து அதிக அளவிலான பங்கேற்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

விளையாட்டு, கலை, நடனம் மற்றும் இசை போன்ற இணை பாடத்திட்டங்கள் மற்றும் பாடநெறிக்கு புறம்பான செயல்பாடுகள் குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியின் மூலம் திறன்களை வளர்க்க உதவுகின்றன.

ஒரு பகுதியில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக இந்த எல்லா நடவடிக்கைகளுக்கும் குழந்தைகளை வழிநடத்துவதன் மூலம், எதிர்கால அணுகுமுறைகள் மற்றும் திறன்கள் நிறைந்த ஒரு தலைமுறையை உருவாக்க முடியும். இந்த யோசனையை வலுப்படுத்துவதே கிரிஸ்ப்ரோ சிசுதெரியா திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.’ என கிறிஸ்புரோ குழுமத்தின் மனித வளங்கள் மற்றும் நிர்வாக சிரேஷ்ட முகாமையாளர் ரஞ்சன மஹிந்தசிறி கூறினார்.

2019இல் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில், வருடாந்திர ஓவியக் கண்காட்சி ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்தது மற்றும் 176 குழந்தைகள் அதில் பங்கேற்றனர். வெற்றிபெற்ற 12 ஓவியங்கள் 2020 கிறிஸ்ப்ரோ காலெண்டரின் அட்டைகளில் அச்சிடப்பட்டன மேலும் பாடசாலை சித்திர அப்பியாசப் புத்தகங்களின் அட்டைகளில் 19 ஓவியங்கள் அச்சிடப்பட்டு ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக, கிறிஸ்புரோ சிசுதெரியா திட்டத்தின் கீழ் அனைத்து கிரிஸ்புரோ வர்த்தக மத்திய நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பள்ளி குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பள்ளி உபகரணங்களை வழங்க முடிந்தது.

மேலும், கிறிஸ்புரோவில் தொழில் புரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு 2019ஆம் ஆண்டில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் உதவித்தொகை மற்றும் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் பரீட்சையில் சித்தியடைந்த 896 மாணவர்களுக்கு கிரிஸ்புரோ பாடசாலைத் திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் மற்றும் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன.

வருடாந்திர சிசுதெரிய திட்டத்திற்கு ஏற்ப, கிறிஸ்புரோ வர்த்தக மத்திய நிலையங்களுக்கு அருகிலுள்ள 17க்கும் மேற்பட்ட பாடசாலைகளைத் தேர்ந்தெடுத்து அந்தப் பாடசாலைகளின் நூலக வளாகத்தை மேம்படுத்த பெருநிறுவன சமூக ரீதியான பொறுப்புணர்வு திட்ட பிரச்சாரத்தையும் ஆரம்பித்தது. இந்த நடவடிக்கையை ஆண்டுதோறும் மேற்கொள்ள கிரிஸ்புரோ நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically integrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.

Hot Topics

Related Articles