உலகம்

Cinnamon Life இலுள்ள ‘The Suites’மற்றும் ‘The Offices’ ஐ ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் இடம் Hyundai கையளிப்பு

 

 

கொழும்பில் பிரம்மாண்டமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் John Keells Properties’இன் கலப்பு அபிவிருத்தித் திட்டமான Cinnamon Life இன் வதிவிடத் தொகுதியான ‘The Suites’மற்றும் நவீன வசதிகள் படைத்த அலுவலகத் தொகுதியான ‘The Offices’ ஆகியவை விரைவில் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

நிர்மாணப்பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், 30 மாடிகளில் 196 அலகு தொடர்மனைத் தொகுதி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தவிசாளர் கிரிஷான் பாலேந்திராவிடம், HKN (Hyundai, Keangnam மற்றும் நவலோக ஆகியவற்றின் இணை நிறுவனம்) ஒப்பந்த திட்டப் பணிப்பாளரான ரி.எச். கிம் இனால் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாலேந்திரா உரையாற்றும் போது, Cinnamon Life இல் ‘The Suites’மற்றும் ‘The Offices’ஆகியவற்றின் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதனூடாக, கொழும்பு நகரில் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றார்.

இந்த பாரிய ஒன்றிணைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தில் தொடர்மனைக் கட்டடங்கள் மற்றும் அலுவலகங்கள் போன்றன பிரதான உள்ளம்சங்களாக அமைந்திருப்பதாக குறிப்பிட்ட ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தவிசாளர், சகல பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டதும், தெற்காசிய பிராந்தியத்தில் காணப்படும் இவ்வாறான கட்டடத் தொகுதிகளுக்கு Cinnamon Life போட்டிகரமானதாக அமைந்திருக்கும் என்றார்.

“ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், 2010 ஆம் ஆண்டில் Cinnamon Life ஐ முதலில் திட்டமிட்டது. Cinnamon Grand மற்றும் Cinnamon Lakeside ஆகிய இரு பாரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை இயக்கும் நிலையில், பாரிய பிராந்திய நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு அவசியமான வசதிகளை கொழும்பு கொண்டிருக்கவில்லை என்பதை நாம் அறிந்திருந்தோம். 800 அறைகளைக் கொண்ட ஹோட்டலுடனான Cinnamon Life இல் போதியளவு மாநாடு இடவசதிகள் மற்றும் விற்பனைப் பகுதிகள் போன்றன அடங்கியுள்ளன. இதனூடாக பிராந்தியத்தின் மாபெரும் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான வசதிகளைக் கொண்டுள்ளது.” என்றார்.

இலங்கையில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாபெரும் தனியார் துறை முதலீடாக இது அமைந்துள்ளதுடன், அடுத்த ஆண்டில் இதன் பணிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டதும், தெற்காசிய பிராந்தியத்தில் கொழும்பை ஓய்வு, களியாட்ட மற்றும் விற்பனை மையமாக திகழச் செய்வதற்கு Cinnamon Life பங்களிப்பு வழங்கும்.” என குறிப்பிட்டார்.

பாலேந்திரா மேலும் குறிப்பிடுகையில், “இது சவால்கள் நிறைந்த காலப்பகுதியாகும், எமக்கு மாத்திரமன்றி, முழு உலகுக்கும் இந்த நிலை காணப்படுகின்றது. சரியான மனநிலையில் அணுகினால் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கும். நாம் HKN இணைந்து இந்த இரு கோபுரங்களையும் பூர்த்தி செய்வதற்கான ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளோம்.” என்றார்.

ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் பிரிவுத் தலைமை அதிகாரியும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறைவேற்று உப தலைவருமான நயன மாவில்மட இந்த நிகழ்வில் உரையாற்றும் போது, Cinnamon Life பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டதும், ஆசியாவின் சிறந்த கட்டடக் கலை அம்சங்களைக் கொண்டிருக்கும். மிகவும் நுட்பமான மற்றும் பிரத்தியேகமான கட்டமைப்பு என கொழும்பு அறியப்படும் விதத்தை Cinnamon Life மாற்றியமைக்கவுள்ளது.” என்றார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “இந்தத் திட்டம் பல வழிகளில் எம்மை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும்.  Cinnamon Life இன் ஸ்தாபக கொள்கையும் இதுவாக அமைந்துள்ளது. உலகுக்கு இலங்கையை கொண்டு செல்வது என்பது இந்தத் திட்டத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளது. நாம் பலரும் எதிர்பாராத வகையில் Cinnamon Life பல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும் என நான் கருதுகின்றேன்.” என்றார்.

நகரினுள் நகரம் என கருதப்படும் Cinnamon Life, கொழும்பின் வாழ்க்கை முறை தலைமையகமாக திகழ முயற்சிப்பதுடன், ஒவ்வொரு தொடுகைப் பகுதியிலும் புதுமையான வாழ்க்கைமுறை அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கும். 800 அறைகளைக் கொண்ட சொகுசு Cinnamon ஹோட்டல் மற்றும் உயர் தர வதிவிடத் தொகுதி ஆகியவற்றுக்கு மேலாக, இந்த சொத்தில் நகரின் முன்னணி விற்பனை மற்றும் களிப்பூட்டும் விற்பனைத் தொகுதிகள், நவீன அலுவலக வசதிகள் போன்றன உயர் சர்வதேச கூட்டாண்மை நியதிகளை பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கும்.

புகழ்பெற்ற இலங்கை-பிரித்தானிய அலங்கார வடிவமைப்பாளரும், கலைஞர் மற்றும் எழுத்தாளருமான சிசில் பல்மொன்ட் இனால் வடிவமைக்கப்பட்ட Cinnamon Life, 4.5 மில்லியன் சதுர அடிப் பகுதியில் வியாபித்துள்ளதுடன், கொழும்பின் மாத்திரமன்றி, முழு உப கண்டத்தின் வாழ்க்கை முறை மற்றும் களிப்பூட்டும் மையமாகத் திகழும். வதிவிடத் தொடர்மனை 395,000 அமெரிக்க டொலர்களில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றது. மேலதிக தகவல்களுக்கு +94-112-152152 அழைக்கவும் அல்லது www.cinnamonlife.com எனும் இணையத் தளத்தை பார்க்கவும்.

 

Hot Topics

Related Articles