உலகம்

காத்தான்குடியை சேர்ந்தவரே நியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டவர் – வெளியானது அதிர்ச்சித் தகவல்

நியூசிலாந்தில் ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்டு கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

எம்.சம்சுதீன் அதில் அல் அஸ்கார் கவுறடி வீதி,காத்தான்குடி – 01, சேர்ந்தவரே இவ்வாறு தாக்குதலைமேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த 1989 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 7 வயதில் வெளிநாடு சென்றுள்ளார். இவர் கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் பின்னர் 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

4 சகோதரங்களை கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாக பிறந்துள்ளார். என்பது தெரியவந்துள்ளது.

ஒரு பெண் சகோதரியும் தந்தையாரும் கனடாவில் வசிக்கும் நிலையில், ஏனைய இரண்டு சகோதரர்களும் கட்டார், சவுதியில் வசிக்கின்றனர்.

குறித்த நபர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன தொடர்புடையவர் என்று நியூசிலாந்து அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

குறித்த நபர் மேற்கொண்ட தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த நபர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்தியபோது அவரை பின்தொடர்ந்து வந்த பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் எனவும் அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Hot Topics

Related Articles