உலகம்

விண்ணுக்கு ஏவப்பட்டு 2 நிமிடங்களில் வெடித்துச் சிதறிய ரொக்கெட்! காணொளி இணைப்பு

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஃபயர் ஃபிளை’ இன் முதலாவது முயற்சியாக விண்ணுக்கு ஏவிய ரொக்கெட் நடு வானில் வெடித்துச் சிதறியது.

அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது வெடித்துள்ளதாக விண்வெளி நிறுவனம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள வன்டன்பெர்க் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து ‘ஆல்பா’ என்ற ரொக்கெட், விண்ணுக்கு ஏவப்பட்டு 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது.

இது வெடித்து சிதறிய காட்சி வான வேடிக்கை போன்று பதிவாகியுள்ளது.

முதல் சுற்றுப்பாதையை அடைய முயன்றபோது கலிபோர்னியா கடல் பகுதியில் பசுப்பிக் பெருங்கடலுக்கு மேலான வான்பரப்பில் இந்த ரொக்கெட் வெடித்து சிதறியதாக விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் தமது முயற்சிகளை அதே உத்வேகத்துடன் தொடர்ந்தும் முன்னெடுக்க உள்ளதாக விண்வெளி நிறுவனம் குறிப்பிடடள்ளது.

Hot Topics

Related Articles