உலகம்

தலிபான்களின் அமைச்சரவையில் சம உரிமை கோரி பெண்கள் வீதியில் இறங்கி போராட்டம்

ஆப்கானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் தலைமையிலான புதிய அரசு அமையவுள்ளது.

புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் இல்லை என்று தலிபான்கள் உறுதியாக மறுத்துள்ளனர்.

இதையடுத்து, காபூலில் உள்ள அதிபர் மாளிகைக்கு வெளியே, இன்று கூடிய பெண்கள், அமைச்சரவையில் பெண்களுக்கு வாய்ப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், ‘ஆப்கனில் கல்வி, சமூகம், பேச்சு சுதந்திரம், அரசியல் உள்ளிட்டவற்றில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு முழு உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

ஆப்கனில் மனித உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். பழமைவாதமும் மத அடிப்படை வாதத்திற்கும் திரும்ப முடியாது’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

Hot Topics

Related Articles