உலகம்

இலங்கையின் பிரபல நீர்வீழ்ச்சி பகுதியில் ஆபாச காணொளிகளை பதிவு செய்த நபருக்கு கொவிட் தொற்று!

இலங்கையின் பலாங்கொடையிலுள்ள பஹந்துடாவ நீர்வீழ்ச்சி பகுதியில் ஆபாச வீடியோ எடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த குறித்த மஹரகம மற்றும் எல்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்த 34 வயதுடைய ஆணும், 24 வயதுடைய பெண்ணும் இன்று பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே கைது செய்யப்பட்ட ஆணுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த இளம் ஜோடி நீர்வீழ்ச்சிப் பகுதியில் ஆபாச வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில், அது சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணணி குற்றவியல் பிரிவு, விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களை கைது செய்தது.

சந்தேக நபர்கள் இதுபோன்று நாட்டில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆபாச வீடியோக்களை எடுத்துள்ளதுடன், ஆபாச வலைத்தளங்களுக்காக இது போன்ற வீடியோக்களை உருவாக்கி அதனூடாக பணம் சம்பாதித்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ன் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Hot Topics

Related Articles