உலகம்

வெலிமடையில் தமது கிளையை திறந்துள்ள Ideal Finance, நடப்பு நிதியாண்டில் தமது கிளை வலையமைப்பை இரட்டிப்பாக்க எதிர்பார்க்கின்றது

 

Ideal Finance Limited தனது 13வது கிளையை வெலிமடையில் திறந்துள்ளது. அதன் நடப்பு நிதியாண்டில் (FY 2021/22) 15 புதிய இடங்களில் தமது கிளைகளை திறந்ததன் மூலம் அதன் கிளை வலையமைப்பினை இருமடங்காக்கும் நிறுவனத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் செயற்பாடாக இது அமைந்துள்ளது.

லீசிங், கடன் வசதிகள் (தங்கக் கடன் சேவைகள் உட்பட) மற்றும் வைப்புக்கள் போன்ற பல சேவைகளை வெலிமடை புதிய கிளை வழங்குகிறது. மலையக காய்கறிகளுக்கான உற்பத்தி மையமாக விளங்கும் மற்றும் கெப்பட்டிபொல பொருளாதார மையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் அமைந்துள்ளமையால் பல்வேறு வகையான விற்பனை சார்ந்த வியாபரம் மேற்கொள்பவர்களுக்கு இந்த புதிய கிளையானது முக்கியமானதாக அமையும்.

வெலிமடையில் கிளை திறப்பை தொடர்ந்து, செப்டம்பர் மாதத்தில் பல முக்கிய இடங்களில் தமது புதிய கிளைகளை திறக்கும் எதிர்பார்ப்பில் Ideal Finance உள்ளது. இது பல்வேறு நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதாவது இந்தியாவின் Mahindra & Mahindra Finance Services Limited (MMFSL) ஊடாக பெற எதிர்பார்க்கின்றது. Ideal Finance சேவையானது தனது சிறந்த பெறுபேறுகளை கடந்த நிதி ஆண்டில் (FY 2020/21) வெளிப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அண்மைய முதலீடு காரணமாக MMFSL தற்போது Ideal Financeஇன் மிகப்பெரிய பங்குதாரராக 58.2% பங்குகளைக் தன்வசம் கொண்டுள்ளது. இது Ideal Financeஐ அதன் இரண்டாவது வெளிநாட்டு துணை நிறுவனமாக மாற்றுகின்றது. Ideal Financeல் MMFSLஇன் மொத்த முதலீடு  2 பில்லியன் ரூபாவாகும். 2020ஆம் ஆண்டில், MMFSL, Ideal Financeல் 38.2% பங்குகளை கொண்டிருந்தது. பாரிய நிதி ஜாம்பவானானும் 11 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுதியான சொத்துக்களை கொண்டதுமான நிறுவனத்தின் ஆதரவைப் Ideal Finance நிறுவனம் பெற்றுள்ளது. இது இலங்கையின் முழு வங்கித்துறையையும் விட அதிகமாகும்.

Fitch Ratingsஇனால் அண்மையில் Ideal Financeன் மதிப்பீட்டை ‘AA- (lka)’ஆக ‘BB- (lka)’ இலிருந்து மேம்படுத்தியது. அத்துடன் ‘பேண்தகைமையான கண்ணோட்டத்தை’ வழங்கியுள்ளதுடன் நிறுவனத்தின் நிலையான தன்மை மற்றும் வாய்ப்புகள் மீது மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்;ளது.

இந்த முன்னேற்றங்களுக்கு மேலும் நேர்மறையான வலுவைச் சேர்த்து, Ideal Finance 2021 மார்ச் 31ம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் அதன் சிறந்த வருடாந்திர நிதி செயல்திறனைப் பதிவு செய்தது, இது கொவிட்-19இன் மத்தியில் நிலவிய பல்வேறு சவால்களை கடந்தே வந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதே காலகட்டத்தில் நாட்டின் வங்கியல்லா நிதி மற்றும் குத்தகைத் துறை (NBFI) குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலாபத்தில் வீழ்ச்சி மற்றும் செயல்படாத கடன்கள் அதிகரித்துள்மையும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், தொழில்துறைக்கு எதிரான போக்கில், Ideal Finance ஒரே நேரத்தில் இலாபத்தில் அதிகரிப்பு மற்றும் அதன் செயல்படாத கடன் விகிதத்தை குறைத்துள்ளது. வரிக்கு முந்தைய இலாபம் 76%ஆல் அதிகரித்து அதன் பெறுமதியான 288.4 மில்லியன் ரூபாவை 2021 மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் பதிவு செய்துள்ளது. வரிக்குப் பிந்தைய இலாபம் 74% அதிகரித்துள்ளதுடன் இது 183.8 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

“Mahindra & Mahindra Finance Services Limited இந்த முதலீட்டின் மூலம் Ideal Finance மற்றும் இலங்கை மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்துள்ளது. இது எமது நாட்டின் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் Ideal Financeஇன் நிலையான தன்மை, வளர்ச்சி தொடர்பான நம்பிக்கையை எடுத்துக் காட்டுகின்றது. மேலும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில், நிறுவனத்தின் முக்கிய செயல்திறன், அனைத்து முக்கிய துறைகளிலும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டது.” என Ideal Financeஇன் தலைவர் நளின் வெல்கம தெரிவித்தார்.

‘விவேகமான மூலோபாய மாற்றங்கள் ஈவுத்தொகையை வழங்கியதே இந்த செயல்திறனுக்கு சான்று. இதுதவிர குறுகிய கால முன்னேற்றங்களுக்கு மேலதிகமாக, இந்த சவால் நிறைந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்ற நடவடிக்கைகள் நீண்டகால வளர்ச்சிப் பாதைக்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. எமது புதிய டிஜிட்டல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன’ என Ideal Finance பிரிதம நிறைவேற்று அதிகாரி துமிந்த வீரசேகர கூறினார்.

‘எமது கிளை வலைப்பின்னலின் விரிவாக்கமானது மேல் மாகாணத்திற்கு வெளியேயுள்ள முக்கிய இடங்களில் Ideal Financeஇன் இருப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே செய்யப்படுகின்றது. அத்துடன் விவசாயம் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்கும், நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் Ideal Finance ஒத்துழைப்பு வழங்கும்’ என Ideal Financeஇன் பிராந்திய முகாமையாளர் நிலங்க ஜயலத் குறிப்பிட்டார்.

Ideal Finance Limited, இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்டதொரு வங்கியல்லா நிதி மற்றும் குத்தகை நிறுவனமாகும். 2012 மார்ச் மாதம் தமது செயற்பாடுகளை கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் ஆரம்பித்தது. கடன் பிரிவில் தங்க கடன்கள், சிறு மற்றும் நடுத்தர அளவு கடன்கள், தனிநபர் கடன்கள், மோட்டார் கார், முச்சக்கர வண்டி மற்றும் வணிக வாகனங்களுக்கான லீசின் வசதிகள் உள்ளிட்ட பல சேவைகளையும் வழங்குகின்றது. Ideal Finance Limited வருடாந்தம் வளர்ச்சியடைந்து வருகின்றதுடன் அதன் இலாபமும் வருடந்தோறும் அதிகரித்து வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles