உலகம்

இலங்கையில் கொவிட் பாதிக்குள்ளான கர்ப்பிணி பெண் மூன்று குழந்தைகள் பிரசவிப்பு!

புத்தளம் வைத்தியசாலையில் கர்ப்பிணி பெண் ஒருவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

தகவல்களின்படி, அந்தப் பெண் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டார்.

அவர் 14 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

எனினும் கர்ப்பத்தின் 34 வாரங்கள் முடிந்த பிறகு, உயர் இரத்த அழுத்தம் காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புத்தளம் மருத்துவமனையில் கர்ப்பத்தின் 35 வது வாரத்தில் அந்தப் பெணுக்க சத்திரசிகிச்சை மூலம் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.

இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இவ்வாறு பிறந்துள்ளன.
தற்போது மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hot Topics

Related Articles