உலகம்

‘இந்தியர்களின் ஆயுட்காலம் 9 வருடங்களால் குறையும் அபாயம்’ : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் தொடர்ந்தும் வளி மாசடைந்து வருவதால், இந்தியர்களின் ஆயுட்காலம் 9 வருடங்களால் குறையும் அபாயம் இருப்பதாக அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின்  தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கொள்கை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு இந்தனை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் உலகில் மிக மோசமாக மாசடைந்த வளி காணப்படுவதாக ஆய்வு தெரிவிக்கின்றது.

இந்த ஆய்வின் படி, வட இந்தியாவில் 480 மில்லியன் மக்கள் “உலகின் மிக மோசமான காற்று மாசுபாட்டை” வளியை சுவாசிக்கின்றார்கள்.

காலப்போக்கில், இந்த நிலைகள் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது.

சுத்தமான வளியைப் பேணுவதற்கு கடுமையான கொள்கைகளைப் பின்பற்றுவதால் மக்களின் ஆயுட்காலத்தில் ஐந்து வருடங்களைச் சேர்க்கலாம் என்றும் ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்திய நகரங்கள் உலகளாவிய மாசுபாடு தரவரிசையில் முன்னிலையில் உள்ளன இங்கு ஒவ்வொரு ஆண்டு ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் வளி மாசடைதல் காரணமாக ஏற்படும் நோய் நிலைமைகளால் உயிரிழக்கின்றனர்.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் (EPIC) ஆற்றல் கொள்கை நிறுவனத்தின் அறிக்கை, வட இந்தியா மக்கள் “உலகில் எங்கும் இல்லாததை விட 10 மடங்கு மோசமான மாசடைந்த”  வளியை சுவாசிக்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதலுக்கு இணங்க காற்று மாசுபாட்டைக் குறைத்தால் தங்கள் வாழ்வில் 10 வருடங்கள் வரை சேர்க்கலாம் என்று கூறுகிறது.

பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்டுள்ளன, பூமியில் மிகவும் மாசுபட்ட முதல் ஐந்து இடங்களில் தொடர்ந்து உள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

Hot Topics

Related Articles