உலகம்

ஆப்கானிஸ்தான்: புதிய அரசாங்கத்தில் பெண்களுக்கு இடம் கிடைக்குமா?

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேரியதையடுத்து தலிபான்கள் வெகு விரைவில் அங்கு ஆட்சி அமைக்க உள்ளன.

புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு இடம் கிடைக்குமா என்று ஒரு மூத்த தலிபான் அதிகாரியிடம் பிபிசி கேள்வி எழுப்பியுள்ளது.

பிபிசி பாஷ்டோவின் இனாயத்துல்ஹாக் யாசினிக்கு அளித்த பேட்டியில், கத்தாரில் உள்ள தலிபான் அரசியல் அலுவலகத்தின் துணைத் தலைவர், பெண்கள் தங்கள் வேலைகளை தொடரலாம் ஆனால் அங்குள்ள உயர் பதவிகளிலோ அல்லது அமைச்சரவையிலோ ஒரு பெண் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

வரும் நாட்களில் தலிபான்கள் புதிய அரசாங்கத்தை அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு அவர்களின் ஆட்சி எப்படி இருக்கும் என்பது பற்றி கேள்விகள் உள்ளன.

Hot Topics

Related Articles