உலகம்

கொரோனா தடுப்பூசி செலுத்திய பெண் அதிர்ச்சி மரணம் ! காரணம் இதுவா?

கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்ட பெண் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நியூசிலாந்தில் பைசர் கொரோனா தடுப்பூசியை பெண் ஒருவர் செலுத்திக்கொண்ட பின் இதய பாதிப்பால் இறந்துள்ளார்.

 

கோவிட் -19 தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு வாரியத்தின் மறுஆய்வுக்குப் பிறகு சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. எனினும், அமைச்சகத்தின் அறிக்கையில் அந்தப் பெண்ணின் வயது குறிப்பிடப்படவில்லை.

மேலும், இறந்த பெண்ணின் மரணம் மயோகார்டிடிசின் (இதயம் தொடர்பான பிரச்சனை) விளைவால் நடந்தது என போர்ட் ஒப்புக்கொண்டதாக நியூசிலாந்து (New Zealand) சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பிரச்சனை கோவிட்-19 தடுப்பூசியான ஃபைசைரின் அரிய பக்க விளைவாக (Rare Side Effect) பார்க்கப்படுகின்றது.

மயோகார்டிடிஸ் (Myocarditis) என்ற இந்த பிரச்சனையால், இதயத்தில் (Heart) உள்ள தசைகளில் வீக்கம் ஏற்படுத்துகிறது.

இது இதயத்தின் அமைப்பை பாதிக்கிறது. பொதுவாக இதுபோன்ற நிலையில் இதயத்திற்கு இரத்தத்தை செலுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

இது இதயத்துடிப்பின் ஒழுங்கற்ற தன்மையை ஏற்படுத்தும். இந்த சூழலில் இதய தசைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக பணியாற்ற வேண்டி வருகிறது.

இதன் காரணமாக தசைகள் வீக்கம் பெற்று அதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. வேர்ல்டோமீட்டர் தரவுகளின்படி, நியூசிலாந்தில் 3519 பேர் கோவிட் -19 (COVID-19) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் உயிரிழந்தனர். 2890 பேர் இந்த தொற்றுநோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நியூசிலாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 603 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

Hot Topics

Related Articles