உலகம்

இஸ்ரேலில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்களை வழங்குவதாக அறிவிப்பு!

இஸ்ரேல் 30 வயதுக்கு மேற்பட்ட தமது நாட்டு பிரஜைகளுக்கு கொவிட் -19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த மாதம், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை வழங்கத் தொடங்கிய உலகின் முதல் நாடாகவும் இஸ்ரேல் உள்ளது.

இதையடுத்து இஸ்ரேல் மக்கள் தொகையின் பரந்த பகுதிக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்கிய உலகின் முதல் நாடாக பதிவாகியுள்ளது.

குறைந்தது ஐந்து மாதங்களுக்கு முன்னதாக இரண்டாவது தடுப்பூசி டோஸை பெற்றவர்கள் மட்டுமே 3 ஆவது டோஸூக்கு தகுதியானவர்கள் என அமைச்சு அறிவித்துள்ளது.

“அனைவருக்கும் போதுமான தடுப்பூசிகள் எங்களிடம் இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம். சென்று தடுப்பூசி போடுங்கள் ”என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் நிட்சான் ஹோரோவிட்ஸ் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, 1,575,898 இஸ்ரேலியர்கள் இதுவரை தடுப்பூசியின் மூன்றாவது டோஸைப் பெற்றுள்ளனர்.

Hot Topics

Related Articles