உலகம்

இலங்கைக்கு பெருமை தேடித்தந்த தங்கமகன் ! வாழ்த்துக்கள் பிரியந்த !

டோக்கியோ பராலிம்பிக்கில் இலங்கைக்கு பெருமை தேடித்தந்துள்ளார் தினேஷ் பிரியந்த.

தினேஷ் பிரியந்த, ஆண்களுக்கான பிரிவு 46 இல் களமிறங்கி 67.79 மீற்றர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்று வராலற்றில் இடம்பிடித்தார்.

இது பராலிம்பிக் வரலாற்றில் இலங்கை வென்ற முதலாவது தங்கப்பதக்கமாகும்.

டோக்கியோ பராலிம்பிக்கில் ஆறாவது நாளான இன்று காலை நடைபெற்ற இப்போட்டியில் இலங்கையின் தினேஷ் பிரியந்தவுக்கும் இந்திய வீரர்களான தேவேந்திர மற்றும் குர்ஜார் ஆகியோருக்கிடையில் பலத்த போட்டி நிலவியது.

இருப்பினும் இலங்கையின் தினேஷ் பிரியந்த தாய் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பராலிம்பிக் வரலாற்றில் இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கம் வென்று சாதித்தார்.

இப்போட்டியில் இந்தியாவின் தேவேந்திரா 64.35 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

மற்றொரு இந்தியரான எஸ்.குர்ஜார் 64.01 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப்பதக்கத்தை வென்றெடுத்தார்.

இந்தியாவின் ‍தே‍வேந்திரா 2016 ரியோ ஒலிம்பிக்கில் இப்போட்டி நிகழ்வில் 63.97 மீற்றர் தூரம் எறிந்ததே உலக மற்றும் பராலிம்பிக் சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles