இலங்கை – இந்தியா நாடுகளுக்கு இடையேயான பயணிகள் விமான சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
புதிய அட்டவணையின் கீழ், மும்பை, சென்னை மற்றும் பெங்களூருக்கு வாரத்திற்கு 4 விமானப் பயணங்களை செயற்படுத்தவுள்ளதாகவும் இலங்கைக்கான இந்தி உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி இடையே வாராந்திர விமானங்களும் இயக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹைதராபாத், புது டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை விமானங்கள் இயக்கப்படும் எனறு உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் சுகாதார வழிகாட்டுதல்கள் அமைய பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் இருந்து நேபாளத்தின் காத்மாண்டுக்கு விமானங்கள் நாளை (31) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.