உலகம்

“அனபெல் சேதுபதி” ட்ரெய்லர் – இரட்டை வேடங்களில் மிரட்டும் விஜய் சேதுபதி, டாப்ஸி!

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து அடுத்த வெளியீடாக உருவாகியிருக்கும் திரைப்படம் ”“அனபெல் சேதுபதி”.

வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி அனபெல் சேதுபதி படம் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

மேலும் விஜய் சேதுபதி மற்றும் டாப்சி இருவருமே இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர் என்பதும் கூடுதல் தகவல்.

மேலும் இந்த படத்தை பழம்பெரும் நடிகர் ஆர் சுந்தர்ராஜன் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.

முதலில் இந்த படத்திற்கு அனபெல் சுப்பிரமணியம் என்றுதான் பெயர் வைத்தனர். பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஹாரர் காமெடி அம்சத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து வெளிவந்த ட்ரெய்லரும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படம் ஹாட்ஸ்டார் தளத்தில் நல்ல பார்வையாளர்களை பெறும் என படக்குழுவினர் பெரிதும் நம்புகிறார்கள்.

Hot Topics

Related Articles