உலகம்

30000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது குழந்தை பிறசவித்த ஆப்கானிஸ்தான் பெண்!

ஆப்கானிஸ்தான் பெண் ஒருவர் பிரிட்டன் விமானத்தில் 30000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது குழந்தை பிறசவித்துள்ளார்.

சோமன் நூரி என்கிற 26 வயதான பெண்ணே இவ்வாறு பெண் குழந்தை ஒன்றை பிறசவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைபற்றியதையடுத்து காபுல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கில் அந்நாட்டு மக்கள் ஏதாவது விமானத்தில் நாட்டை விட்டு வெளியேற எதிர் பார்த்துள்ளனர்.

அவ்வாறு அங்கிருந்து வெளியேறி துபாய் சென்றிருந்த சோமன் நூரி என்ற கர்ப்பிணி பெண் பின்னர் துபாயில் இருந்து, பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரத்துக்கு மக்களை மீட்டு வரும் துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.

இதன் போது பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது அந்த விமானத்தில் பறந்த பயணிகளில் மருத்துவர் யாரும் இல்லை. இதனால், விமான பணியாளர்கள் சேர்ந்து, சோமன் நூரிக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

விமானம் 30000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, சோமன் ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அப்பெண்ணுக்கு ஹவா அல்லது ஆங்கிலத்தில் ஈவ் என பெயரிட்டுள்ளனர். தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.

சோமன் நூரியுடன் அவரது கணவர் தாஜ் மோஹ் ஹம்மத் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளும் உடன் பயணித்திருந்தனர்.

Hot Topics

Related Articles