உலகம்

‘கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு ஒரு ‘ டோஸ்’ தடுப்பூசி போதும்‘ : ஆய்வில் தகவல்

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு ‘கோவாக்சின்’ தடுப்பூசி ஒரு ‘டோஸ்’ செலுத்தினாலே தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது’ என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டோருக்கு எத்தனை டோஸ் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. சென்னையில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது.

இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வு முடிவுகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வைத்தியர்கள் உட்பட முன்கள பணி யாளர்களிடம் சென்னையில் மே மாதத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 114 பேர் பங்கேற்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.

அவர்களுக்கு, கொரோனா வால் பாதிக்கப்படாமல் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டோருக்கு கிடைக்கும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த முதற்கட்டப் பரிசோதனைகளை அதிகமானோருக்கு செய்ய வேண்டும். அதில் இந்த முடிவுகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு உறுதி செய்யப்பட்டால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தினாலே போதுமானது. அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். என அதில் கூறப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles