உலகம்

இந்த காயில் புற்றுநோய் உண்டாக்கும் பொருள் இருக்குதாம்! ஆராச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

சந்தைகளில் விற்கப்படும் கலப்படமிக்க காய்கறிகளை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நம்மால் கலப்படமிக்க காய்கறிகளை சாப்பிடாமல் இருக்க முடியும்.

அதற்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில் ஒரு சோதனை வீடியோவைப் பகிர்ந்தது.

அதில் நாம் சாப்பிடும் பச்சை நிற காய்கறிகள் மற்றும் கீரைகள் கலப்படம் உள்ளதா இல்லையா என்பதை எவ்வாறு சோதிக்கலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

சோதிக்கும் முறை

திரவ பாராஃபினில் ஒரு பஞ்சுருண்டையை நனைக்க வேண்டும்.

பின் அந்த பஞ்சுருண்டையால் வெண்டைக்காயின் ஒரு சிறு பகுதியைத் தேய்க்க வேண்டும்.

அப்படி தேய்க்கும் போது, பஞ்சுருண்டை பச்சை நிறமாக மாறவில்லை என்றால், வெண்டைக்காய் கலப்படமற்றது.

ஒருவேளை பச்சை நிறமாக மாறினால், வெண்டைக்காய் கலப்படமிக்கது.

மலாக்கிட் பச்சையின் பக்கவிளைவுகள்

நிபுணர்களின் கூற்றுப்படி, மலாக்கிட் பச்சை என்னும் சாயத்தின் நச்சுத்தன்மையானது.

அதன் வெளிப்பாடு நேரம், வெப்பநிலை மற்றும் செறிவு ஆகியவற்றால் அதிகரிக்கிறது.

இந்த கெமிக்கல் கலந்த காய்கறிகளை ஒருவர் உட்கொள்ளும் போது, அது புற்றுநோய், மரபணு பிறழ்வு, குரோமோசோமல் எலும்பு முறிவுகள் மற்றும் சுவாச நச்சுத்தன்மையைக் கூட ஏற்படுத்தக்கூடும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது

Hot Topics

Related Articles