உலகம்

ஆப்கான் அவலம் ; காபுலில் உணவு பொதி 100 டொலர்களுக்கு விற்பனை!

காபுல் விமான நிலையத்தில் ஒரு போத்தல் குடி நீர் விலை 40 டொலருக்கும் சாப்பாடு 100 டொலருக்கும் விற்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

20 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேரும் நடவடிக்கைகளை ஆரம்பித்ததையடுத்து தாலிபான்கள் முன்னேர தொடங்கினர்.

ஆப்கான் படைகளுடன் நடந்த தாக்குதலில் ஆகஸ்ட் 15ம் தேதி காபுல் நகரை தாலிபான்கள் கைப்பற்றினர்.

ஆப்கான் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேரியதை அடுத்து ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாடும் அவர்களின் கைகளுக்கு மாறியிருக்கிறது.

ஆனால் காபுலில் சிக்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் முழுமையாக மீட்கப்படும் வரை காபுல் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை மட்டும் அமெரிக்கா கையில் வைத்திருக்கிறது.

தற்போது காபுலின் ஹமீது கர்சாய் விமான நிலையம் மட்டுமே ஆப்கனை விட்டு வெளியேறுவதற்கான ஒரே வழியாக உள்ளது.

இதன் காரணமாக காபுல் விமான நிலையத்தின் எதிரே பல்லாயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் ஏதேனும் ஒரு விமானத்தில் ஏறி வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வேண்டும் என்ற வேட்கையில் அங்கேயே தங்கியுள்ளனர்.

காபுல் விமான நிலையத்தில் ஒரு  போத்தல் குடி நீர் விலை 40 டொலருக்கும் சாப்பாடு 100 டொலருக்கும் விற்கப்படுவதாக ரொய்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் எதுவும் ஆப்கன் மதிப்பில் விற்கப்படுவதில்லை, அமெரிக்க டாலர்கள் மதிப்பில் விற்கப்படுகிறது.

இது சாதாரன மக்களுக்கு கட்டுப்படியாகாது எனவும்  ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

காபுல் விமான நிலையம் அருகே நிலவும் மோசமான சூழலை அடுத்து அவ்வப்போது அங்குள்ள மக்களுக்கு அமெரிக்க படையினர் தண்ணீர் போத்தல்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

அதே போல காபுல் விமான நிலையத்தில் சிக்கித்தவிக்கும் பெண்கள், சிறுமிகளின் நிலை மிகவும் கேள்விக்குறியாக இருப்பதாக அங்கிருப்பவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

விமான நிலையத்துக்கு செல்லும் பகுதிகள் மற்றும் வெளிப்புற பகுதிகள் என அனைத்துமே தாலிபான்கள் வசம் தான் உள்ளது.

இதற்கிடையே ஆப்கனில் பிரிட்டன் தனது மீட்பு நடவடிக்கைகளை நிறைவு செய்ததோடு பிரட்டன் படைகள் வெளியேறி விட்டனர்.

அமெரிக்க படைகள் அங்கு உள்ள நிலையில் கடைசி கட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனினும் 31 ஆம் திகதியுடன் வெளிநாட்டு படைகள் வெளியேறுவதற்கான காலக்கெடு முடிவடைவதையடுதது காபுல் விமான நிலைய கட்டுப்பாடு தாலிபான்களின் வசம் சென்றுவிடும் என கூறப்படுகிறது.

Hot Topics

Related Articles