உலகம்

பிளாஸ்டிக் கழிவுகளின் பெறுமதியை இளம் தொழில்முனைவாளர் எவ்வாறு இனங்கண்டார்

 

பிளாஸ்டிக் அற்ற சுற்றாடலுக்காக பெத்தும் காண்பித்த விருப்பமானது, இலங்கையில் கழிவுகளை சேகரிப்பதற்கு செயன்முறை கொண்ட திட்டத்தை உருவாக்கவதற்கான ஊக்கத்தை அவருக்கு வழங்கியது.

வருடந்தோறும் கொண்டாப்படுகின்ற சர்வதேச இளையோர் தினம் என்றவுடன் உலக அபிவிருத்திற்கு இளைஞர்கள் வெளிப்படுத்தும் ஆற்றல்மிகு பங்களிப்பே எமது ஞாபகத்திற்;கு வரும்.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12ம் திகதி கொண்டாடப்படுகின்ற சர்வதேச இளையோர் தினத்தில், உலகம் எதிர்கொள்ளும் பிரிச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க இளைய தொழில்முனைவோர்களின் தீர்மானங்கள் வெளியாகும். அதன்மூலம் நாம் வாழும் இந்த உலகிற்கு புதிய எதிர்பார்ப்பை வழங்;க முனையும் இளைஞர்கள் தொடர்பாக அதிக நம்பிக்கை எமக்குள் ஏற்படுகின்றது.

தொழில்நுட்பம் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்புடன், பொறுப்பற்ற விதத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல்  மற்றும் முகாமைத்துவம் செய்வதில் தோன்றியுள்ள சிக்;கல் நிலை துரிதமாக அதிகரித்துள்ளமையால் இலங்கை பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.

இலங்கையில் பிளாஸ்டிக் பாவனையானது 16% வளர்ச்சியை காண்பிக்கின்ற நிலையில் வருடாந்தம் 265,000 மெட்ரிக் தொன் பாவனை செய்யப்படுகின்றதாக அறியக்கிடைத்துள்ளது. இதனால் ஏற்படக்கூடிய அபாய நிலையை உணர்ந்துகொண்ட 20 வயது பெத்தும் நிரஞ்;சன என்ற இளைஞர் 2011இல் PET (Polyethylene Terephthalate) (பொலிஎதலீன் டெரெஃதலேட்) பிளாஸ்டிக் மற்றும் ஏனைய பிளாஸ்டிக் சேகரிக்கும் நிலையத்தை அத்துருகிரிய பிரதேசத்தில் P&L Industries  என்ற பெயரில் ஆரம்பித்தார்.

சுற்றாடலை நேசிக்கும் இளைஞன்

தற்போது 30 வயது இளைஞரான பெத்தும் கருத்து தெரிவிக்கையில் ‘பிளாஸ்டிக் கழிவுகளற்ற சூழல் உருவாக்க எனக்குள் இருந்த அதிக ஆசை காரணமாக எனது தொழில்சார் வாழ்க்கையை இந்த வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். P&L Industries ஆரம்பிக்க முன்னர் நான் PET பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றினேன். வீதிகளின் இருபுறம் தொடங்கி தண்ணீர் நிலைகள் உட்பட அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் இருப்பதை கண்டேன். PET பிளாஸ்டிக் மட்டுல்ல ஏனைய பிளாஸ்டிக் கழிவுகளையும் சேகரிப்பதற்கான முயற்சியில் நான் ஈடுபட வேண்டும் என தீர்மானித்தேன்’ என கூறினார்.

‘சாதாரணமாக, மேல் மாகாணத்தில் நகர சபை ஊடாக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கழிவுகளை சேகரித்த பின்னர், எமது குழுவினரை ஈடுபடுத்தி கழிவுகளை சேகரித்தல் மற்றும் கொள்வனவு செய்யும் பணிகளை செய்தோம். பிளாஸ்டிக்களின் தன்மைக்கேற்ப, PET போத்தல் கிலோகிராம் 20-30 ரூபாவிற்கும் ஏனைய பிளாஸ்டிக் (HDPE மற்றும் PP) கிலோகிராம் ஒன்று 60-70 ரூபாவிற்கும் கொள்வனவு செய்தோம். அனைத்து மாதங்;களிலும் எமது குழுவினர் அண்ணளவாக 450,000 PET போத்தல்கள் மற்றும் ஏனைய பிளாஸ்டிக் மெட்ரிக் தொன் 70 – 80 வரை சேகரித்து மறுசுழற்சி பணிகளுக்கான வழங்கினோம். இலங்கையின் பாரிய பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனமான இகோ ஸ்பின்ட்லஸ் ஊடாக தொற்று நோய் காலத்திலும் பெத்தும் போன்று பிளாஸ்டிக் Nசுகரிப்பாளர்களுக்கு அவர்களது வருமானம் குறைந்தபோதும் கடன் தொகையை வழங்கி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை பாராட்டத்தக்கது.

பெத்துமின் வியாபாரம் தற்போது வெற்றிகரமாக காணப்பட்டாலும், பெத்தும் தமது வியாபாரத்தை ஆரம்பித்து முன்நோக்கி செல்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். அவர் தமது வியாபாரத்தை ஆரம்பிக்கும்போது கழிவுகளை சேகரிப்பதற்கு திறமையான நபர்கள் இல்லாமை மற்றும் இந்த வியாபாரத்தில் நிலவிய குறைந்த கேள்வி காரணமாக வியாபாரத்தை ஆரம்பிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார். சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகளை களஞ்சியப்படுத்த தகுதியான இடத்தை கொள்வனவு செய்வதற்காக அவர் பணத்தை சேமித்தார். வியாபாரம் தொடர்பாக புரிந்துணர்வு கொண்ட ஊழியர்களும் அவருக்கு தேவைப்பட்டனர்.

அகௌரவத்திலிருந்து விடுபடல்

‘அத்துடன் நாம் எதிர்கொண்ட இன்னொரு பிரச்சினையாக கழிவுகளை சேகரிப்பதில் உள்ள விருப்பமின்மையை குறிப்பிடலாம். இது கீழ் மட்ட வியாபாரம் என்ற எண்ணம் சமூகத்தில் நிலவுகின்றது. இது உங்களுக்கு இலாபம் சம்பாதிக்கும் வியாபாரம் என்பதுடன் எமது சுற்றாடலுக்கு மற்றும் எமது அழகான நாட்டிற்கு அதனூடாக சேவை இடம்பெறுகின்றது என்;பதை மறக்க வேண்டாம். அநேகர் இந்த தொழிலை ‘போத்தல் பத்திரிகை’ வியாபாரம் என்றே அழைக்கின்றதுடன் இன்று இந்த வியாபாரம் மற்றும் அதனால் செய்யப்படும் பணியானது பல்வேறு தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் நிலைமை வரை மாற்றமடைந்துள்ளது’ என கூறினார்.

இந்த சவால்களுக்கு மத்தியிலும் தமது கனவை நனவாக்கிக் கொள்வதற்கும் இந்த தொழிலுக்கு ஏற்பட்டுள்ள அகௌவரத்திலிருந்து விடுபடுவதற்கும் பெத்தும் முயன்றார். தற்போது மறுசுழற்சிக்கு பிளாஸ்டிக் சேகரித்தல், கொள்வனவு செய்தல் மற்றும் போக்குவரத்திற்கு அவரிடம் நான்கு வாகனங்கள் உள்ளதுடன் அவரிடம் 15 பேர் பணியாற்றுகின்றனர். ‘எனது கழிவு சேகரிக்கும் வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு எனக்கு திட்டமிருந்தது. எனக்கு மறுசுழற்சி செய்வதற்கு தேவையான வசதிகள் கொண்ட இயந்திரங்களுடன் இந்த வியாபாரத்தை முன்னெடுக்க தேவை ஏற்பட்டது. ஆகையால் நான் பிளாஸ்டிக் நசுக்குவதற்கு பயன்படுத்தும் உரசளாநச இயந்திரமொன்றை கொள்வனவு செய்தேன். அதன்மூலம் நூல் உற்பத்திக்கும் HDPE பிளாஸ்டிக் தூளாக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தும் எல்கெத்தீன் குழாய் (Alkathene pipes) தயாரிப்பதற்கும் பணியாற்றும் நிறுவனங்களுக்க அவற்றை வழங்கினேன்’ என அவர் கூறினார்.

முன்னேற சந்தர்ப்பம்

P&L Industriesஐ விரிவாக்கும் பெத்துமின் முயற்சியில் அவர் நம்புவது, நிகழ்காலத்தில் நிலவும் கொவிட்-19 தொற்று காரணமாக நிறுவனம் மட்டுப்பட்டுள்ளதால் கழிவு சேகரிக்கும் பிரிவில் இலங்கையால் முன்னேற முடியும். PET சிறு துகள்களை இறக்குமதி செய்தால் ஒரு கிலோகிராமிற்கு 300- 400 ரூபா செலவாகின்றது. உள்ளுர் ரீதியாக நிறுவனத்திற்கு கிலோகிராம் ஒன்றை 150 ரூபாவிற்கு வழங்க முடியும். ஆகையால் பிளாஸ்டிக்கு பதிலாக இன்னும் எமக்கு இலாபம் தரும் மாற்றீடு இல்லாததால், PET போத்தல்களுக்கு தடைவிதிப்பது செயல்முறையான தீர்வாகாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் கண்ணாடி விலை அதிகம் என்பதால் கண்ணாடி போத்தல் பயன்பாடு மற்றும் அதனை ஏற்றி இறக்குவதில் அதிக கவனமாக இருத்தல் வேண்டும் போன்ற பிரச்சினைகள் அதிகம் காணப்படுகின்றது’ என அவர் குறிப்பிட்டார்.

கடின உழைப்பும் அர்ப்பணிப்புமே வெற்றியின் அடித்தளம் என்பதை பெத்தும் கதை எமக்கு கற்பிக்கின்றது. பிளாஸ்டிக் கழிவுகள் தெளிவாக பாரிய பிரச்சினையாகவுள்ள இன்றைய காலகட்டத்தில் அதற்கான செயல்முறை தீர்வு தரும் பங்குதாரராக இருக்கவே விரும்பினேன் என குறிப்பிட்ட பெத்தும், ‘என்னைப் போன்று பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பவர்களிடமிருந்து இவற்றை கொள்வனவு செய்யாவிட்டால், இந்த கழிவுகளுக்கு புத்துயிர் வழங்க முடியாது. அவற்றை திறந்த கழிவுகள் கொண்ட நிலத்தில் புதைத்தால், எமது வியாபாரம் பாரிய அழுத்தத்தை எதிர்நோக்கும்’ என குறிப்பிட்டார்.

மறுசுழற்சியானது, பிளாஸ்டிக் போத்தல்களின் பெறுமதியை தொடர்ச்சியாக மேம்படுத்தி மறைமுக பொருளாதாரத்திற்கு உதவுகின்றது. கழிவு சேகரிக்கும் பெத்தும் இந்த நிலையான வியாபார செயற்பாட்டின் முக்கிய பங்குதாரராக இருக்கின்றார்.

Hot Topics

Related Articles