உலகம்

One Galle Face Business Tower இல் ESOFT இன்டர்நஷனல் கம்பஸ் தனது வளாகத்தை திறக்கத் திட்டம்

  1. (One Galle Face (Shangri-La) Business Tower இல் அமைந்துள்ள ESOFT இன்டர்நஷனல் கம்பஸ் வளாகம்)

 

புத்தாக்கமான மற்றும் நவீன கல்வித் தீர்வுகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்குவதில் முன்னோடியாகத் திகழும் ESOFT குழுமம், தனது நவீன வசதிகள் படைத்த ESOFT இன்டர்நஷனல் கம்பஸ் (EIC) வளாகத்தை 2021 செப்டெம்பர் மாதத்தில் One Galle Face (Shangri-La) Business Tower இல் நிறுவத் திட்டமிட்டுள்ளது.

புதிய நவீன வசதிகள் படைத்த சர்வதேச கம்பஸ் ஒன்றிலிருந்து கிடைக்கும் வசதிகளை அனுபவிக்க எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு, முதல் அல்லது இரண்டாவது வருடத்தில் கல்வி பயின்றதன் பின்னர் இலங்கையின் தனியார் கல்வித் துறையில் EIC ஒப்பற்ற அனுபவத்தை வழங்குவதாக அமைந்திருக்கும். EIC இல் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த, தரமான சொகுசான அம்சங்கள் நிறைந்த சூழலில் தமது கல்வியைத் தொடரக்கூடியதாக இருக்கும்.

வியாபாரம், கணினி மற்றும் சட்டம் தொடர்பான கட்டமைக்கப்பட்ட பட்டப்படிப்புகளை வழங்கும் வகையில் ESOFT இன்டர்நஷனல் கம்பஸ் அமைந்துள்ளது. அதற்காக லண்டனின் Kingston பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்துள்ளது. ஒப்பற்ற பாடவிதானத்துடன், EIC ஐச் சேர்ந்த மாணவர்களுக்கு BSc (Hons) in Cyber Security and Digital Forensics, BSc (Hons) in Multimedia Technology, BSc (Hons) in Entrepreneurship and Innovation, BSc (Hons) in International Business, மற்றும் LLB மற்றும் graduate பட்டங்களை EIC இடமிருந்து அல்லது பிரித்தானியாவின் Kingston University London இடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

கொழும்பின் காலி முகத் திடலுக்கு முகப்பான பகுதியில், இந்து சமுத்திரத்தின் பரந்த காட்சியமைப்புடன் இந்த பிரத்தியேகமான கம்பஸ் வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் நவீன வகுப்பறை பயிலல், நூலகங்கள் வசதிகள், பரந்தளவு பொழுதுபோக்கு வசதிகள், நவீன ஆய்வுகூட வசதிகள் போன்றவற்றுடன், நவீன தொழில்நுட்ப ஒன்றிணைப்பு, போன்றன வழங்கப்பட்டு, சர்வதேச பயிலல் அனுபவத்தை தொடர்வதற்கான நம்பிக்கையும், சௌகரியமும் வழங்கப்படுகின்றன.

WPP Presentation

ESOFT குரூப் ஒஃப் கம்பனிஸ் தவிசாளர் கலாநிதி. தயான் ராஜபக்ச இந்த புதிய வளாகத்தின் அறிமுகம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், “மாணவர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கற்கைகளைத் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்கி, பிரயோகத் திறன்களுடன், தொழிற்துறைசார் வலையமைப்பு மற்றும் நிஜ உலக அனுபவங்களை பெற்றுக் கொள்ள வழிகோலுவதாக அமைந்துள்ளது. இதனூடாக, எமது மாணவர்களுக்கு ஐக்கிய இராஜ்ஜியத்தில் பயிலும் வகையில் இலகுவாக மாற்றியமைத்து, தயார்ப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இதை மேற்கொள்ளும் வகையில் ESOFT இன்டர்நஷனல் கம்பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

தென் மேற்கு லண்டன் பகுதியில் தேம்ஸ் நதிக் கரையை அண்மித்த பொது ஆய்வு பல்கலைக்கழகமாக Kingston University London திகழ்கின்றது. மத்திய லண்டனிலிருந்து 25 நிமிடங்களில் புகையிரதத்தில் பயணிக்க முடியும். 100 வருடங்களுக்கு மேலான பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம், சர்வதேச ரீதியில் வளர்ந்து வரும் கீர்த்தி நாமத்தைக் கொண்டுள்ளது. பல்வேறு பங்காண்மைகள் மற்றும் முன்னணி ஆய்வுகளில் பங்கேற்றுள்ளது. நான்கு கம்பஸ்களில் ஐந்து வளாகங்களைக் கொண்டுள்ளதுடன், மொத்தமாக 20000 மாணவர்கள் தொகையையும் தன்வசம் கொண்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான Guardian University Guide league tables இல் நாட்டிலுள்ள சிறந்த 40 நிலையங்களில் ஒன்றாக Kingston University பட்டியலிடப்பட்டுள்ளது.

2021 செப்டெம்பர் மாணவர் சேர்ப்புக்காக தற்போது விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் பணிகளை EIC மேற்கொள்கின்றது. மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்புடன், வருடமொன்றில் ஒரு தடவை மாத்திரம் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ள நிலையில், அனுமதிகள் விரைவில் பூர்த்தியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. EIC விண்ணப்ப அணியை 0766 445 445 அல்லது 0766 445 446 ஊடாக தொடர்பு கொள்ளவும். www.esoftinternational.com எனும் இணையத்தளத்தினூடாக பதிவு செய்து வாழ்க்கையை மாற்றியமைக்கும் கல்விப் பயணத்தை ஆரம்பியுங்கள்.

Hot Topics

Related Articles