உலகம்

Chili’s® American Grill & Bar கொழும்பில் தனது முதலாவது உணவகத்தைத் திறக்கின்றது

டெக்சாஸ் உணவுச்சுவை உத்வேகத்தைக் கொண்ட வர்த்தகநாமம் நகரத்தில் புதிய உணவு அனுபவத்தைக் கொண்டு வரும்    

Chili’s® American Grill & Bar உணவகமானது 2021 ஆகஸ்ட் 16 அன்று கொழும்பிலுள்ள வண் கோல்பேஸ் பேரங்காடியில் தனது முதன்முதல் கிளையை திறந்து வைத்து அனைவருக்கும் விருந்து படைக்கவுள்ளது.

உணவகத் துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்த Mukund Hospitality Pvt. Ltd ஆல் இலங்கையில் முதன்முதலாக இயக்கப்படும் உணவமாக இது மாறியுள்ளதுடன், இந்நிறுவனம் முன்பதாக வடக்கு மற்றும் கிழக்கு இந்திய மாநகரங்களில் இத்தகைய உணவகங்களை திறந்து வைப்பதற்காக Chili’s® American Grill & Bar உடன் கூட்டாண்மையை ஏற்படுத்தியிருந்தது.

டெக்சாஸ் உணவுச்சுவை வடிவமான ‘Fresh Mex’ உணவு வகைகளின் பட்டியலில் Sizzling Fajitas, Hand-Crafted Burgers, Fresh Mex Rice Bowls, Hand-Shaken Margaritas மற்றும் signature desserts உள்ளிட்ட பல்வேறுபட்ட உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.

அதிநவீன Chili’s® American Grill & Bar வடிவமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் இந்த உணவகம் நகரத்தில் நவீன வழக்கமான உணவு விருந்து அனுபவத்தைக் கொண்டு வரும். இது கிட்டத்தட்ட 7,400 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட பிரமாண்டமான இட வசதியுடன் 240 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் ஒன்றாக அமரும் வசதிகளைக் கொண்டுள்ளது. இது தினந்தோறும் மதிய மற்றும் இரவு உணவுகளுக்காக திறந்திருப்பதுடன், விருந்தினர்கள் நேரடியாக வருகை தந்து உணவருந்த முடியும் அல்லது தாம் விரும்பியவற்றை அங்கிருந்து எடுத்துச் சென்று அருந்த மகிழ முடியும்.

“Chili’s Fresh Mex இன் பிரபலமான உணவுகளை கொழும்பில் அறிமுகப்படுத்துவதையிட்டு நாம் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். ஆறுதலான சூழலில், விநோதமாக பொழுதைப் போக்கும் அதேசமயம், அற்புதமான சுவை கொண்ட உணவு மற்றும் பானங்களை தமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உட்கொண்டு மகிழ விரும்புகின்ற விருந்தினர்களுக்கு தமது சேவைகளை வழங்குவதற்கு ஆர்வமும், உற்சாகமும் மிக்க எமது அணி தயாராக உள்ளது. Chili’s இல் புத்தம்புதிதாக தயாரிக்கப்பட்ட, உயர் தரம்மிக்க உணவுகளை தனித்துவமான சூழல் பின்னணியில் வழங்குவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்,” என்று Mukund Hospitality இன் பணிப்பாளரான ரிஷி பஜோரியா அவர்கள் குறிப்பிட்டார்.

Chili’s இல் வாடிக்கையாளர் பாதுகாப்பிற்கு அதிமுக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. அங்கு தொழிற்படுகின்ற பணியாளர்கள் அனைவரும் முற்றிலுமாக தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டுள்ளதுடன், கொவிட்-19 நெறிமுறைகள் அனைத்தையும் கண்டிப்பாகப் பின்பற்றுகின்றனர்.

ஆகவே, Chili’s ஆனது ‘எதிலும் தொடுகை அற்ற’ கொள்கையை கடைப்பிடிப்பதுடன், உணவுக்கான ஆர்டரைத் தயார் செய்வது முதல் பரிமாறுவது வரை எச்சந்தர்ப்பத்திலும் நேரடியான உடல் தொடுகையின்றமையை உறுதி செய்கின்றது. ஆகவே உணவின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்றது. உணவு அருந்த வருகை தருகின்ற விருந்தினர்களுக்கு சௌகரியம் அளிக்கும் உணர்வை ஏற்படுத்தி, தற்போதைய நெருக்கடி மிக்க காலகட்டத்தில் தமது உணவுகளை ஆறுதலாக உட்கொண்டு மகிழ்வதற்கு வாய்ப்பளிக்கின்றது.

புதிய உணவு வகைகளின் பிரத்தியேகமான பட்டியல், சலுகைகள், ஊக்குவிப்புக்கள் தொடர்பான பிரத்தியேகமான தகவல் விபரங்களை விருந்தினர்கள் அறிந்து கொள்வதற்கு www.chilis.lk க்கு வருகை தந்து மின்னஞ்சல் குழுவில் இணைந்து கொள்ள முடியும்.

 

Hot Topics

Related Articles