உலகம்

பேண்தகைமையான வர்த்தகத்திற்காக கிரிஸ்புரோவின் அர்ப்பணிக்கப்பட்ட பசுமை பராமரிப்பு

 

இலங்கையின் மிகப்பெரிய கோழி இறைச்சி உற்பத்தியாளரான கிரிஸ்புரோ, அதன் பேண்தகைமையான வர்த்தக நடைமுறைகளை பராமரிக்கும் அதே வேளையில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தனது உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளது. கிரிஸ்புரோ குழுமத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பெருநிறுவன சமூக பொறுப்பு முயற்சிகளில் முதன்மையான வரிசையிலுள்ள கிராஸ்ப்ரோ ‘ஹரித சத்காரய’ சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ், நிறுவனத்தின் கம்பளை கோழி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை வளாகத்துடன் இணைந்து 250க்கும் மேற்பட்ட புதிய செடிகளை நடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையின் பசுமை அடர்த்தி வேகமாக குறைந்து வரும் ஒரு காலகட்டத்தில் கிரிஸ்புரோ தனது தொழிற்சாலை வளாகத்தின் மூலம் சமூகத்திற்கு தெரிவித்த நல்ல செய்தி மற்ற நிறுவனங்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்பது இரகசியமல்ல. சுற்றுச்சூழல் தரவுகளின்படி, 1990 மற்றும் 2011க்கு இடையில் இலங்கையின் கார்பனீர் ஒட்சைட்டின் வெளியேற்றம் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. இதை உணர்ந்து, கிரிஸ்புரோ தனது பேண்தகைமையான வர்த்தக பார்வையை வலுப்படுத்தியுள்ளது மற்றும் 3,500க்கும் மேற்பட்ட புதிய தாவரங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளில் அதன் பசுமை பராமரிப்பு திட்டத்தின் மூலம் நாட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கிரிஸ்புரோ குழுமத்தின் மனிதவள மற்றும் நிர்வாக முகாமையாளர் ரஞ்சன மஹிந்தசிற கூறுகையில், ‘இலங்கையின் மிகப்பெரிய கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ, இலங்கை சமுதாயத்தின் ஒவ்வொரு நேர்மறையான அம்சங்களையும் சென்றடைவதற்கும், எங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குவதற்கும் உறுதிபூண்டுள்ளோம்.

அதே சமயம், ஒரு பேண்தகைமையான வர்த்தக திறமைகளைக் கொண்ட ஒரு நிறுவனம் என்ற வகையில், நமது எதிர்கால சந்ததியினரை மையமாகக் கொண்டு சுற்றுச்சூழலின் வளர்ச்சியின் கவனிப்பை மேற்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.எங்கள் உற்பத்தி நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, ஆலை முழுவதும் நாங்கள் செயல்படும் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு கொண்ட இலங்கையில் கோழி இறைச்சித் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு.

ஒவ்வொரு ஆண்டும், கிரிஸ்புரோ குழுமம் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல திட்டங்களைத் ஆரம்பித்து வருகிறது, இது கிரிஸ்புரோ குழுமத்தின் முக்கிய குறிக்கோள்களான சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சமூக சுகாதாரம், சமூக – பொருளாதார நீதி மற்றும் பொருளாதார இலாபத்தன்மை போன்றவற்றை அடைவதில் கவனம் செலுத்துகிறது. எங்கள் முன்னணி தயாரிப்பு, புதிய கோழி இறைச்சி உற்பத்தி செயல்முறைக்கு வளமான மண், வளமான தாவர அமைப்பு மற்றும் சுத்தமான நீர் வளங்கள் தேவை.

மேற்கூறிய காரணிகளைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் நாங்கள் மிகுந்த அக்கறை செலுத்துவதால் இலங்கையின் சிறந்த கோழி இறைச்சித் தயாரிப்பு இலச்சிணையாக மக்களால் மதிக்கப்படுகிறோம். கடந்த 50 ஆண்டுகளில், முழு உற்பத்தி செயல்முறையிலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க முடிந்த ஒரு பெரிய தொழில்நுட்பத்தை நாங்கள் அடைந்துள்ளோம்.’ என தெரிவித்தார்.

கிரிஸ்புரோ அதன் உற்பத்திகளின் தரம் குறித்து அதிக கவனம் செலுத்துவதால் உணவு உற்பத்தி தொடர்பான பல சர்வதேச தரங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, கோழி உற்பத்தி வலைப்பின்னல்களில் பூஜ்ஜிய விரயக் கொள்கை (zero-wastage policy) மற்றும் ISO 9001:14000 சர்வதேச தரப்படுத்தலைக் கடைப்பிடிப்பதன் மூலம் அனைத்து செயல்முறைகளையும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பராமரிக்க கிரிஸ்புரோ குழுமம் செயல்பட்டுள்ளது.

கிரிஸ்புரோ புத்தாக்க தயாரிப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது, இதனால் உற்பத்தி செயல்முறையிலிருந்து புத்தாக்க தயாரிப்புக்களின் மூலம் அகற்றப்படும் கழிவுகளை உற்பத்தியின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு மீண்டும் பயன்படுத்தவுள்ளது. நிறுவன வளாகத்தில் மட்டுமல்லாமல், கிரிஸ்புரோவுடன் தொடர்புடைய அனைத்து சிறு கோழி பண்ணை உரிமையாளர்களையும் விவசாயிகளையும் அவர்கள் உற்பத்தித் துறைக்கு ஏற்ப சூழல் நட்பு கொள்கைகளை பின்பற்றவும் ஊக்குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரிஸ்புரோ பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்களான திரி சவிய, பிரஜா அருண, சிசு திரிய, சுவ சக்தி, மற்றும் கிரிஸ்புரோ Next Champ ஆகிய பல்வேறு துறைகளில் சமூகத்தை மேம்படுத்துகின்றனர்.

கிரிஸ்புரோ திரி சவிய திட்டம் 1,200க்கும் மேற்பட்ட அரிசி மற்றும் சோள விவசாயிகள் மற்றும் 250க்கும் மேற்பட்ட சிறு கோழி பண்ணையாளர்களுக்கு பயனளிக்கிறது மற்றும் சந்தை விலையில் நேரடியாக தங்கள் விளைபொருட்களை வாங்குகிறது. சிசு திரிய திட்டம் இதுவரை 200க்கும் மேற்பட்ட பயிற்சி நியமனங்களை வழங்கியுள்ளது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கும் பாடசாலை அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை நன்கொடையாக வழங்குகிறது.

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில், கல்விப் பொது தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சித்தியடைந்த ஊழியர்களின் குழந்தைகளுக்கும் புலமைப்பரிசில்களும் வழங்கப்படுகிறது. தனது ஊழியர்களின் ஆரோக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவ சக்தி திட்டத்தின் ஊடாக, இதுவரை 20க்கும் மேற்பட்ட சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ், கிராமப்புற மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உதவி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

CRYSBRO Next Champ திட்டம் என்பது எதிர்கால ஒலிம்பிக் பதக்கம் வெல்பவர்களை உருவாக்குவதற்கான முதன்மை திட்டமாகும். இது நாடு முழுவதிலுமிருந்து திறமையான பாடசாலை மட்டத்திலான விளையாட்டு வீரர்களை அங்கீகரிக்கிறது, மேலும் தேசிய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து, அவர்களின் திறமைகளை மேம்படுத்த புலமைப்பரிசில்களையும் வழங்குகிறது.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically integrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.

Hot Topics

Related Articles