உலகம்

சொஃப்ட்லொஜிக் லைஃப் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணமாக 9.2 பில்லியன் பதிவுசெய்துள்ளதுடன் முதல் அரையாண்டில் அது 43% வளர்ச்சியாகும்

வரிக்கு பின்னரான இலாபம் ரூ. 920 மில்லியன் என்பதுடன் அது 73% வளர்ச்சியாகும்

வரிக்கு முன்னரான இலாபம் ரூ.1,454 மில்லியன்

மூன்றாவது பாரிய ஆயுள் காப்புறுதியாளன் என்ற தரத்தை தொடர்ந்து பேணியமை

நிறுவனமானது கொவிட் இழப்பீடுகளுக்கு ரூ.247 மில்லியன் கோரல்களை வழங்கியுள்ளது

தொற்றுநோய் காரணமாக வியாபார நடவடிக்கைகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தாலும், சொஃப்ட்லொஜிக் லைஃப் ஏனைய இரண்டு காலண்டுகளிலும் சிறந்த செயற்திறனை பதிவுசெய்துள்ளது. ஜுன் 30ம் திகதியுடன் நிறைவடைந்த ஆறு மாதத்தில் அதன் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணமானது (Gross Written Premium – GWP) ரூ. 9,181 மில்லியனாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 43% வளர்ச்சியாகும்.

இந்த காலகட்டத்தை பரிசீலனை செய்துப்பார்த்தால், சொஃப்ட்லொஜிக் லைஃப் சந்தை பங்கு 16.3% ஆக அதிகரித்துள்ளது. இது 2020 டிசம்பர் 31ம் திகதியுடன் அது 15.2% ஆக இருந்தது. சந்தை பங்கு உயர்வில் (GWP) ஆயுள் காப்பீட்டு சந்தையில் சொஃப்ட்லொஜிக் லைஃப் மூன்றாவது பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. வலுவான வளர்ச்சி வேகத்தை நிறுவ பணியாளர்கள் திறம்பட தமது பணியை முன்னெடுத்தனர்.

தொழில்துறை வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் (Compound Annual Growth Rate – CAGR), இது 2021 இன் முதல் ஆறு மாதங்களில் 43.3% ஆக இருந்தது. 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட காப்புறுதிதார்களுக்கு நன்மைகளை வழங்குவதில் நிறுவனம் தமது பணியை கடந்த 10 ஆண்டுகளாக முன்னெடுத்துச் செல்கின்றது.

மீளாய்வு காலத்தில் வரிக்கு பின்னரான இலாபம் ரூ.920 மில்லியனாகும். இது 73% அதிகரிப்பாகும். வரிக்கு பின்னரான இலாபமானது, வரி விகிதத்தை 28% இலிருந்து 24% ஆக மாற்றியதன் காரணமாக 232 மில்லியன் ஒத்திவைக்கப்பட்ட வரி சொத்துக்களை மாற்றியமைத்தது. அத்தகைய வரி விலக்கு இல்லாமல், கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இம்முறை இது அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் செயல்பாட்டு செலவு விகிதம் 20% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு 27% காணப்பட்டது.

நிறுவனத்தின் நிதி செயல்திறன் குறித்து, சொஃப்ட்லொஜிக் லைஃப் இன்சூரன்ஸ் பிஎல்சியின் தலைவர் அசோக் பத்திரகே கருத்து தெரிவிக்கையில், ‘தொற்றுநோயால் பல சவால்கள் இருந்தாலும், இலங்கையில் மூன்றாவது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமாக எங்கள் இடத்தை தக்க வைத்துக்கொண்டு நாம் முன்னேறியுள்ளோம்.
 இரண்டாவது காலாண்டின் இறுதியில் எங்களது சந்தைப் பங்கானது 16.3% ஆக அதிகரித்துள்ளது. இந்த சாதனைகள் எம்மால் பயன்படுத்தப்பட்ட உத்திகள் மற்றும் தொற்றுநோய்களின் போது கூட அந்த உத்திகளை வலுவாக செயல்படுத்துவதன் மூலம் எளிதாக்கப்பட்டன, இது நிலவும் பாரிய சவால்களுக்கு மத்தியிலும் வேகத்தை தக்கவைக்க உதவியது’ என குறிப்பிட்டார்.

சொஃப்ட்லொஜிக் லைஃப் பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்;பாளர் இப்திகார் அஹமட் கருத்து தெரிவிக்கையில், ‘தொற்றுநோய் என்பது நெகிழ்வுத்தன்மை, செயல்திறன், பதிலளித்தல் மற்றும் புதுமை ஆகியவற்றை வெளிப்படுத்த சொஃப்ட்லொஜிக் லைஃப் இற்கு பாரிய சவாலாக இருந்தது. ஒட்டுமொத்த செயல்திறனையும் வணிகத் தொடர்ச்சியையும் உறுதி செய்வதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் ஆதரவுடன் எங்கள் செயல்முறை மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்ந்து ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனத்திற்கு உதவின. இந்த காலாண்டிலும் வலுவான செயல்திறனை ஊக்குவிக்கும்.

ஆனால் மிக முக்கியமாக எங்கள் ‘ஒரு நிமிட உரிமைகோரல் முன்முயற்சி’ போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் ஒவ்வொரு நியாயமான உரிமைகோரல்களையும் செலுத்தும் வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாடு மற்றும் பல்வேறு பொருளாதாரப் பின்னணிகளில் உள்ள இலங்கையர்களுக்கு காப்புறுதியை வழங்குவதற்கு உதவ புதுமையான தயாரிப்பு முன்மொழிவுகளைக் கண்டறிந்து எமக்கு வெற்றி பெற உதவியது. 1.5 மில்லியன் இலங்கையர்களின் நம்பிக்கை.

ஆயுள் காப்பீட்டாளராக நாங்கள் ரூ. 2,618 மில்லியன், எங்களது போட்டியாளர்களோடு ஒப்பிடுகையில் இரண்டாம் காலாண்டில் வழங்கியுள்ளோம். எமது வாடிக்கையாளர்களுடன் நாம் இருக்கின்றோம் என்பதற்கான சான்றாக இது உள்ளது.

கஷ்டங்களை எதிர்கொள்வதில் நிறுவனம் நெகிழ்ச்சியுடன் இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், மேலும் வரும் மாதங்களில் வணிக நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சியை உறுதி செய்ய நாங்கள் எடுத்த நடவடிக்கைகளில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என அவர் குறிப்பிட்டார்.

சொஃப்ட்லொஜிக் லைஃப் காப்புறுதி நிறுவனம் இலங்கையில் சுகாதாரம், நுகர்வோர் பொருட்கள், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், ஆட்மோமொபைல் மற்றும் நிதி சேவை உள்ளிட்ட துறைகளில் பாரிய வளர்ச்சியையும் பன்முகப்படுத்தலையும் கொண்ட வர்த்தக வலையமைப்பை கொண்ட சொஃப்ட்லொஜிக் குழுமத்தின் உறுப்பினரான சொஃப்ட்லொஜிக் கெப்பிட்டல் பிஎல்சி உரிமத்தின் கீழ் உள்ளது. நிறுவனத்தின் குறிப்பிடக்கூடிய பங்காளர்களாக உலக முதலீட்டாளரான டுநயிகுசழப inஎநளவஅநவெ உள்ளது.

Hot Topics

Related Articles