உலகம்

அமானா வங்கி 10 வருடங்களாக மக்களுக்கு நட்பான வங்கிச் சேவைகளை வழங்குவதை பூர்த்தி செய்துள்ளது

இலங்கையில் வட்டிசாரா வங்கியியல் கொள்கைகளை பின்பற்றி இயங்குவதற்காக அங்கீகாரம் பெற்ற ஒரே வணிக வங்கியான அமானா வங்கி, மக்களுக்கு நட்பான வங்கிச் சேவைகளை வழங்குவதில் 10 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது.

2011 ஆகஸ்ட் 1ஆம் திகதி தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த அமானா வங்கி, உறுதியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 380000 க்கும் அதிகமான பெறுமதி மிக்க வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்திருந்த ஆதரவு மற்றும் நம்பிக்கை போன்றவற்றினூடாக இது சாத்தியமாகியிருந்தது.

இந்த 10 வருடங்களினுள், வங்கி மொத்த சொத்துக்கள் பெறுமதியாக 100 பில்லியன் ரூபாயை எய்தியுள்ளது. தனது கிளை வலையமைப்பை 32 கிளைகளாக விஸ்தரித்துள்ளதுடன், 19 சுய வங்கி நிலையங்கள், LankaPay மற்றும் Pay&Go ஊடாக 5000 க்கும் அதிகமான ATMகள் மற்றும் 850 க்கும் அதிகமான வைப்பு அலகுகள்  போன்றவற்றைக் கொண்டுள்ளதுடன்  பரந்தளவு வங்கிச் சேவைத் தீர்வுகளை வழங்குகின்றது.

கடந்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்த வங்கி, இலாபம் மற்றும் பங்கிலாபம் போன்றவற்றை உறுதியான பதிவுகளைக் கொண்டுள்ளது. இதற்காக வங்கிக்கு அமெரிக்காவின் குளோபல் ஃபினான்ஸ் சஞ்சிகையினால் “உலகின் சிறந்த வளர்ந்து வரும் இஸ்லாமிய வங்கி” எனும் கௌரவிப்பும், ஐக்கிய இராஜ்ஜியத்தின் குளோபல் பாங்கிங் அன்ட் ஃபினான்ஸ் விருதுகளினால் “இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர்  வங்கி” எனும் கௌரவிப்பும் கிடைத்திருந்தன.

இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ள சிறிய, நடுத்தரளவு தொழிற்துறைக்கு அமானா வங்கி சேவையாற்றியுள்ளதுடன், அதன் மக்களுக்கு நட்பான வங்கிச் சேவை என்பது உறுதியான மூலோபாய  பொருத்தப்பாடு கொண்டுள்ளது. நியம வங்கிச் சேவைகளுக்கு அப்பால் சென்று, வங்கியின் பிரதான வியாபார செயற்பாடுகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள் போன்றன ஐக்கிய நாடுகள் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் (UNSDG) குறிப்பிடப்பட்டுள்ள நிலைபேறான வங்கியியல் செயற்பாடுகளை பின்பற்றுவதாக அமைந்துள்ளன.

UNSDG இலக்கு 10 ஆன “சமத்துவமின்மையை குறைத்தல்” என்பதன் பிரகாரம், வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு செய்திட்டமான OrphanCare ஊடாக, நாடு முழுவதையும் சேர்ந்த 80க்கும் அதிகமான அநாதை இல்லங்களின் 3000க்கும் அதிகமான அநாதரவான சிறுவர்கள் தமது 18 வயதை பூர்த்தி செய்ததும், நிதிச் சுதந்திரத்தை எய்துவதற்கு அவசியமான உதவிகள் வழங்கப்படுகின்றன. சிறுவர் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் செயலமர்வில் காண்பிக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் பிரகாரம் சகல அநாதரவான சிறுவர்கள் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அதாவது, சகல இன, மத, மொழி பாகுபாடுகள் எதுவுமின்றி உள்வாங்கப்படுவதை உறுதி செய்கின்றது. சமூகத்தில் உயர்ந்த மட்டத்தைச் சேர்ந்த காப்பாளர்களால் நிர்வகிக்கப்படும் இந்த OrphanCare இனால் இதுவரையில் 7 சுற்று நிதி விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 18 வயதுக்கு மேற்பட்ட அநாதரவானவர்களுக்கான பராமரிப்பும் வழங்கப்படுகின்றது. (www.amanabank.lk/orphan-care)

 

வளர்ச்சியை செயற்படுத்தி, வாழ்வுகளுக்கு வளமூட்டுவது எனும் வங்கியின் நீண்டகால திட்டத்துக்கமைய, அதன் விருது வென்ற ‘Gold Certificate Financing’ தீர்வை அறிமுகம் செய்திருந்தது. 50,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு அவசியமான தருணங்களில் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்தது. இது சிறந்த கொள்கைகளை நிறைவேற்றுவதில் அணியினர் கொண்டுள்ள ஈடுபாடு, அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் போன்றவற்றினூடாக, வேர்ள்ட் HRD காங்கிரசில் “இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமம்” எனும் வரிசையில் நிலை நிறுத்துவதற்கு பெறுமதி வாய்ந்த நாமமாக கொண்டு வர உதவியாக அமைந்திருந்தது.

 

இந்த வரலாற்று மைற்கல் சாதனை தொடர்பில் வங்கியின் பணிப்பாளர் சபைத்  தலைவர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில், “2011 ஆம் ஆண்டில் எமது செயற்பாடுகளை ஆரம்பித்தது முதல், அமானா வங்கி வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக திகழ்வதுடன், அனைத்து இலங்கையர்களுக்கும் சேவையாற்றுவதனூடாக, உள்நாட்டு வங்கியியல் துறையில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இயங்கி வருகின்றது. எமது பங்காளர்களின் ஆதரவின்றி எம்மால் இந்தப் பயணத்தை முன்னெடுத்திருக்க முடியாது. சட்ட திட்ட ஒழுங்குபடுத்துநர்கள், முக்கிய மூலதன பங்காளர்கள், சகல பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், ஊழியர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் நிர்வாகக் குழு ஆகியோருடன் முக்கியமான எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.

 

வங்கியின் ஸ்தாபக தலைவர் ஒஸ்மான் காசிம், கடந்த ஆகஸ்ட் மாதம் தமது ஓய்வுகால ஒழுங்குவிதிமுறை தேவைப்பாட்டின் பிரகாரம் தமது பதிவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இவர் கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கி என்பது எனது நீண்ட கால கனவாகவும், அதீத ஈடுபாடாகவும் இருந்தது. தொடர்ந்தும் எனது உள்ளத்தில் நிலைத்திருக்கும். எனது 40க்கும் அதிகமான தொழில்முயற்சியாண்மை வருடங்களில் நான் மேற்கொண்டிருந்த பல அர்த்தமுள்ள நடவடிக்கைகளில், அமானா வங்கியை நிறுவியிருந்தமை என்பதை நான் மிகவும் சவால்கள் நிறைந்த பணியாக குறிப்பிட விரும்புகின்றேன். எவ்வாறாயினும், என்னில் அதிகளவு தன்னிறைவையும், மகிழ்ச்சியையும் இது ஏற்படுத்தியிருந்தது. வங்கியில் முதலீடுகளை மேற்கொண்டிருந்த எமது ஊக்குவிப்பாளர்கள் மற்றும் முக்கிய மூலதனப் பங்காளர்களுக்கும், எமது வாடிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், இவர்களின் ஆதரவின்றி இந்த வங்கிச் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்திருக்க முடியாது.” என்றார்.

 

10 வருட பூர்த்தி தொடர்பாக வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “வங்கிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் 10 வருட கால சேவையை நாம் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ள நிலையில், இந்தப் பயணத்தில் முக்கிய பங்கை வகித்த எமது வாடிக்கையாளர்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவிக்கின்றேன். வாடிக்கையாளராக மாத்திரமன்றி, எமது பிரத்தியேகமான மக்களுக்கு நட்பான வங்கியியல் மாதிரியின் அனுகூலம் பெறுநர்களாகவும் அவர்கள் திகழ்கின்றனர். எமது முக்கிய மூலதனப் பங்காளர்களான IsDB குரூப், அக்பர் பிரதர்ஸ் மற்றும் பாங்க் இஸ்லாம் மலேசியா ஆகியோரின் ஆதரவின்றில் எம்மால் இவ்வளவு தூரம் பயணித்திருக்க முடியாது. எமது ஸ்தாபக தலைவர் ஒஸ்மான் காசிம், ஸ்தாபக பணிப்பாளர்கள், தற்போதைய தலைவர் அஸ்கி அக்பரலி மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் மற்றும் ஷரிஆ மேற்பார்வை சபை ஆகிய சகல தரப்பினருக்கும் அவர்களின் பெறுமதி வாய்ந்த வழிகாட்டல்களுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இறுதியாக, எனது 800க்கும் அதிகமான சக ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.

 

இந்தப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பில் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “டிஜிட்டல் வங்கிச் சேவைகளில் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டில் அதிகரிப்பை அவதானித்திருந்ததைத் தொடர்ந்து, டிஜிட்டல் மாற்றியமைப்பு பயணத்தில் வங்கி கவனம் செலுத்துகின்றது. இதற்காக வங்கி டிஜிட்டல் மேம்படுத்தல் சேவைகளை பின்பற்ற முன்வந்துள்ளதுடன், அதனூடாக வங்கியின் சேவைகளை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும். எமது பயணத்தின் அடுத்த நிலைக்கு நாம் நகரும் நிலையில், இறைவனின் நாட்டத்துடன்  , எம்மால் தொடர்ந்தும் கடினமாக உழைத்து, உயர் சேவை அனுபவம் மற்றும் செவிமடுக்கும் வங்கிச் சேவைகளை எமது வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றேன்.” என்றார்.

 

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2020 ஒக்டோபர் ஃபிட்ச் ரேட்டிஸ் ஸ்ரீ லங்காவினால் வங்கியின் தேசிய நீண்ட கால தரப்படுத்தலான BB+(lka) உறுதியான நிலை என்பதை வழங்கியிருந்தது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.

 

 

 

 

 

 

ஒஸ்மான் காசிம்                                                     அஸ்கி அக்பரலி                              மொஹமட் அஸ்மீர்

ஸ்தாபக தலைவர்                                        தலைவர்                         பிரதம நிறைவேற்று அதிகாரி

 

Hot Topics

Related Articles