உலகம்

071 832 00 00- நுண்நிதியினால் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடுகளை வழங்குவதற்கான உதவி அழைப்பு!

நுண்நதி வாடிக்கையாளர்கள் முகங்கொடுக்கின்ற யாதேனும் பிரச்சினைகள் அல்லது மனக்குறைகளை இனங்கண்டு தீர்ப்பதற்கான ஒரு உயிர்ப்புடைய நடவடிக்கையாக, இலங்கை நுண்நிதி செயற்பாட்டாளர்களின் சங்கமானது (டுஆகுPயு) சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் ஆலோசனையுடன்கூட பொதுமக்களுக்காக ஷநுண்நிதி உதவி அழைப்பு| என்னும் அலகை நிறுவியுள்ள அதேவேளை அத்தகைய மனக்குறைகளை நிவிர்த்தி செய்யும் முன்னெடுப்புக்களை பொறுப்புவாய்ந்தவர்கள் உரிய நேரத்தில் நிறைவேற்றுவதை வலியுறுத்தி, ஊக்குவிக்கும் செயற்பாடாக இது அமைந்துள்ளது.

இந்த முன்னெடுப்பானது கடந்த 2021 ஆகஸ்ட் 03ம் திகதி 1ம் மாடி, செத்சிரிப்பாய நிலை ஐஐ, பத்தரமுல்லையில் அமைந்துள்ள சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அண்மைக்காலமாக இலங்கையில் நுண்நிதித் தொழிற்துறை பற்றிய பாதகமான ஊடக அறிக்கைகள் பரப்பப்பட்டு வந்ததுள்ளன. இத்தகைய அறிக்கைகள் ஒட்டுமொத்த நுண்நிதி தொழிற்துறையிலும் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால் இவ்விடயம் தொடர்பான அக்கறைகள் டுஆகுPயு இன் கவனத்தை ஈர்த்தது.

டுஆகுPயு என்பது இலங்கையில் உள்ள 2 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையுடைய குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மொத்தமாக 80 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடனான நுண் நிதி சேவைகளை வழங்கும் 53 நுண் நிதி நிறுவனங்களை (ஆகுஐள) பிரதிநித்துவப்படுத்தும் ஒரு குடை வலையமைப்பாகும்.

கடந்த காலங்களில் இது போன்ற ஊடக அறிக்கைகள் முன்வைக்கப்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில், அவை தொடர்பான உண்மையைக் கண்டறியும் நல்ல எண்ணத்திலும் மற்றும் அத்தகைய பிரச்சினைகளைச் சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்திலும் டுஆகுPயு ஆனது இந்த நிறுவனங்களுக்குப் பதிலளித்திருந்தது. டுஆகுPயு ஆனது ஒரு பொறுப்புடைய அமைப்பாக பிரதான தொழிற்துறை சார்ந்த பங்குதாரர்களை பாதுகாக்க விரும்புகின்றது.

விசேடமாக, மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினராகக் காணப்படுகின்ற அதேவேளை தற்போது கோவிட் – 19 தொற்றுநோயின் தாக்கத்தையும் எதிர்கொண்டுள்ள ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களைக் கருத்திற்கொள்ளும் அதேசமயத்தில் அங்கத்துவ நிறுவனங்களினதும், தொழிற்துறையினதும் நிலைத்திருக்கும் தன்மையை பாரிய அளவில் உறுதிசெய்யும் வண்ணம் செயற்படுகின்றது.

வாடிக்கையாளர்கள் முறைப்பாடுகளைக் கையாளும் முறைமையின் செயன்முறையானது பின்வருமாறு அமைந்திருக்கும்:
• சிங்களத்தில் அல்லது தமிழில் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
• நேரடி கடன் பெறுனர்களின் முறைப்பாடுகள் மட்டுமே பின்தொடர் நடவடித்கைகளுக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
• வாய்மொழி வழியான தொலைபேசி முறைப்பாடுகள் எழுத்துபூர்வமான முறைப்பாடுகளாகத் தொடரப்பட்டு, வாட்ஸ் அப், வைபர், மின்னஞ்சல் அல்லது தபால் வழியாக டுஆகுPயு க்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
• குறிப்பிட்ட முறைப்பாடானது டுஆகுPயு இன் அங்கத்துவ நிறுவனத்திற்கு எதிரான ஒன்றாகக் காணப்படும் பட்சத்தில், 2 வாரங்களுக்குள்ளாக அவ்விடயத்தைச் சரிசெய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக அவ்விடயம் உரிய அங்கத்துவ நிறுவனத்திற்கு அறிவிக்கப்படும்.
• குறிப்பிட்ட முறைப்பாடானது டுஆகுPயு இன் அங்கத்துவ நிறுவனமல்லாத ஒரு நிறுவனத்திற்கு எதிரான ஒன்றாகக் காணப்படும் பட்சத்திலும்கூட, டுஆகுPயு ஆனது ஒரு தொழிற்துறைச் சங்கம் என்கின்ற வகையில் அவ்விடயத்தைச் சரிசெய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக உரிய நிறுவனத்திற்கு எழுத்துமூலம் அதனை அறிவிக்கும் அதேவேளை அதன் பிரதியொன்று பின்தொடர் செயற்பாடுகளுக்காக நுண்நிதி நிறுவனங்களுக்கான இராஜாங்க அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்படும்.

இராஜாங்க அமைச்சர் தனது உரையில், தேவையுள்ள இத்தகைய தருணத்தில் இந்த நுண்நிதி உதவி அழைப்பு என்னும் விடயத்தை ஆரம்பிக்கும் பொருட்டு டுஆகுPயு ஆனது மேற்கொண்ட முயற்சிகளுக்கு தமது பாராட்டினைத் தெரிவத்தார். ‘நுண்நிதி செயற்பாடுகளின் நோக்கம் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்காக மூலதனத்தைத் திரட்ட இயலாத குடும்பங்களுக்கு தேவையான உதவியை வழங்குவதே ஆகும். ஆயினும், சமீப காலங்களில் ஊடகங்கள் வாயிலாக கடன் வழங்கும் நிறுவனங்களிலிருந்து பல்வேறு வகையான தொந்தரவுகளை எதிர்கொள்ளும் நுண் நிதிப் பயனாளிகளிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகளைக் கேள்விப்பட்டு வருகின்றோம்.

இந்த உதவிச் செயற்பாட்டின் நோக்கம் இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பினரின் குறைகளை வெளிப்படைத் தன்மையுடன் தீர்ப்பதாகும்” என கௌரவ n~ஹான் சேமசிங்ஹ அவர்கள் தெரிவித்தார். நுண் நிதி மற்றும் முறைப்படுத்தும் அதிகார சட்டமூலத்தை மிக விரைவில் அறிமுகப்படுத்த அரசு ஆயத்தமாக உள்ளதாகவும், நுண் நிதி நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்களின் குறைகளைக் கையாளும் பொருட்டு, ஏற்கனவே ஒரு புதுமையான அணுகுமுறையை முன்னெடுத்துக் கொண்டிருப்பது ஊக்கமளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த முயற்சியானது நுண் நிதி வாடிக்கையாளர்களின் உண்மையான குறைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், தொழிற்துறையில் காணப்படும் விமர்சன நிலையைக் குறைப்பதற்கும், தேசிய பொருளாதார அபிவிருத்தியில் இன் முக்கிய பங்கினை உறுதி செய்வதற்கும் மற்றும் நாட்டிலுள்ள கிராமப்புற, பெருந்தோட்ட மற்றும் ஏனைய வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களற்ற சமூகங்களில் அபிவிருத்திக்கான நன்மைகளின் விநியோகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவும் வழிவகுக்கும் என டுஆகுPயு நம்புகின்றது.

இந்த செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல ஒத்துழைப்பு வழங்கும் பொறுப்பு அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கும் காணப்படுகின்ற அதேவேளை இதனூடாக இந்த முயற்சியின் மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை அடைந்துகொள்ள முடியும். இந்த நிகழ்ச்சித் திட்டத்தைப் பற்றி மக்களுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டியிருப்பதனால், திரும்பத் திரும்ப இதுதொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

உதவி அழைப்புக்கான தகவல்கள்:
தொலைபேசி ஃ வாட்ஸ் அப் ஃ வைபர் இல: 071 832 00 00
மின்னஞ்சல்: helpline@microfinance.lk
விலாசம்: இல. 32, சூரியமல் மாவத்தை, திவுலப்பிட்டிய, பொரலஸ்கமுவை
செயற்படும் காலப்பகுதி: முற்பகல் 7.00 தொடக்கம் பிற்பகல் 7.00 வரை
வாரத்தின் 7 நாட்களும்

Hot Topics

Related Articles