உலகம்

ஆசிரியர் துறையில் உள்ளவர்களுக்கு தேசிய சேவையை உறுதிப்படுத்தும் SLIIT இன் ‘குரு விரு’

கல்வித் துறையைப் பலப்படுத்துவதற்குத் தேவையான முக்கிய திறன்கள் மற்றும் மனப்பான்மையுடன் கல்வியாளர்களை மேம்படுத்துவது மற்றும் அவர்களைப் பலப்படுத்துவது என்ற நோக்கத்தில் SLIIT இன் மனிதநேய மற்றும் விஞ்ஞான பீடத்தினால் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் திட்டமான ‘குரு விரு’ என்ற தலைப்பிலான நுண்ணறிவுமிக்க சமூகக் கூட்டுப்பொறுப்புத் திட்டமொன்று அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

விரிவுரையாளர்கள், அதிபர்கள், பாடசாலைஆசிரியர்கள் மற்றும் ஆயர் அமைப்பில் பணியாற்றும் ஆசியர்கள் உள்ளிட்ட கல்வித்துறையில் உள்ளவர்களின் தேவையை இத்திட்டம் நிறைவேற்றுகிறது.

கல்வி மற்றும் விடயதானங்களில் நிபுணத்துவம் பெற்றவர்களுடான அனுபவம் மற்றும் திறன் பகிர்வு, ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதன் ஊடாக முன்னேற்றத்தை ஏற்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும்.

கல்வியாளர்களைப் பலப்படுத்துவதற்கும், நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் இதன் நன்மையைப் பெறும்வகையில் அமர்வுகளை இலவசமான முறையில் தேசிய சேவைiயாக வழங்குவதில் SLIIT உறுதியாகவுள்ளது.

‘குரு விரு’ அங்குரார்ப்பண நிகழ்ச்சி பொல்கொல்ல மஹாவலி தேசிய கல்வியியல் கல்லூரியுடன் இணைந்து 2021 ஜுன் 23ஆம் திகதி வெற்றிகரமாக முடிவடைந்தது. ‘செயல் ஆய்வு’ தொடர்பான அமர்வு கல்லூரியின் பயிலுனர்களுக்கு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் 400ற்கும் அதிகமான உள்ளகப் பயிற்சி மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர். SLIIT இன் மனித நேய மற்றும் விஞ்ஞான பீடத்தின் ஸ்கூல் ஒப் எடியுகேஷனின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.விராஜித் கமகே இந்த அமர்வை வழங்கினார்.

இந்த அமர்வை நடத்துவதற்கும், நிகழ்வை ஒருங்கிணைப்பதிலும் மஹாவலி தேசிய கல்வியியல் கல்லூரியின் தலைவர் காந்தி லியனகே முக்கிய பங்காற்றினார்.

இந்த அமர்வு வெற்றியளித்ததைத் தொடர்ந்து இதுவரை பல்வேறு செயலமர்வுகள் நடத்தப்பட்டன. புள்ளிவிபரவியல் ஆய்வுக்கு மிகவும் அவசியமான மென்பொருளான SPSS இன் பயன்பாடு தொடர்பில் மஹாவலி, பேராதனை மற்றும் சியானே தேசிய கல்வியியல் கல்லூரி ஆகியவற்றுக்கு நடத்தப்பட்ட அமர்வு இதில் ஒன்றாகும். SLIIT இன் மனித நேய மற்றும் விஞ்ஞான பீடத்தின் கணித திணைக்களத்தின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் ரி.எஸ்.ஜீ.பீரிஸ் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சிந்தனையைத் தூண்டும் வகையிலான செயலமர்வில் 100ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

தேசிய கல்வியியல் கல்லூரிகளில் இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு கணிசமான கேள்வி இருப்பதால், எதிர்காலத்தில் பல்வேறு செயலமர்வுகளை நடைமுறைப்படுத்த SLIIT திட்டமிட்டிருப்பதாக மனித நேய மற்றும் விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி.மலித விஜேசுந்தர தெரிவித்தார்.

 

Hot Topics

Related Articles