உலகம்

“கொழும்புக்கு வரவேண்டாம்” ரோஸி சேனாநாயக்க அறிவுரை!

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொழும்புக்கு வருவதை முடிந்தவரை குறைக்குமாறு கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க பொது மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கொழும்பில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முடிந்தவரை மக்கள் தமது வீடுகளில் இருக்கும்படியும் தேவையான அத்தியாவசிய சேவைகளை இணையத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் படியும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு நகரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், தற்போது அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நாடு முன்னர் எப்போதும் இல்லாத மிகவும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதாக மேயர் சுட்டிக்காட்டினார்.

தற்காலிகமாகவேனும் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி நாட்டை இந்த சூழ்நிலையிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Hot Topics

Related Articles