உலகம்

இலங்கையில் திருமண நிகழ்வுகளை நடத்த மறு அறிவித்தல் வரை தடை!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) ஆம் திகதி நள்ளிரவு முதல், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

வீடுகளிலும், மண்டபங்களிலும், இவ்வாறு திருமணங்களை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், இன்று(15) நள்ளிரவு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் ஒன்றுகூட அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதமானோரை மட்டுமே அனுமதிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பொது இடங்களில் நடமாடுவதை இயன்றளவு தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles