உலகம்

சீனா தமது நாட்டு மக்களுக்கு பூரணமாக தடுப்பூசிகளை வழிங்கி விட்டதாக அறிவிப்பு!

உலகின் அதிக சனத்தொகையை கொண்ட நாடான சீனா  ஆகஸ்ட் 12 ஆம் திகதி நிலவரப்படி 777 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கொவிட் -19 க்கு எதிராக தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 12 நிலவரப்படி சீனாவில் மொத்தமாக 1.832 பில்லியன் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் தமது நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் மி ஃபெங் ஒரு செய்தியாளர் மாநாட்டில் கூறியுள்ளார்.

சீனாவில் வழங்கப்படும் ஏழு கொவிட் -19 தடுப்பூசிகளில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 5 தடுப்பூசி வகைகளில் 2 டோஸ்கள் வழங்கப்பட வேண்டும்.

அதேபோ மற்றொரு தடுப்பூசி வகையில் ஒரு டோஸ் மட்டும் வழங்கினால் போதுமானது, மேலும் ஒரு தடுப்பூசி வகையின் மூன்று டோஸ்கள் வழங்கப்பட வேண்டும்.

ஏற்கனவே 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கியுள்ள சீனா தற்போது 12 வயது முதல் 17 வயது வரையானவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை செயற்படுத்திவருகின்றது.

Hot Topics

Related Articles