உலகம்

இலங்கையில் கடந்த மூன்று தினங்களில் 471 பேர் கொரோனாவிற்கு பலி!

இலங்கையில் (14) நேற்று 160 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக்கத்தின் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதில் 30 வயதிற்குட்பட்ட ஆண் ஒருவரும் 30- 59க்கும் இடைப்பட்ட வயதுடைய 22 ஆண்களும் 13 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 64 ஆண்களும் 60 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5, 935ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் தினசரி கொவிட் உயிரிழப்புகள் 150 கடந்து பதிவாகியுள்ள மூன்றாவது நாள் இதுவாகும்.

அத்தோடு கடந்த 3 நாட்களில் 471 பேர் கொவிட்-19 காரணமாக மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டில் இன்று (14) மேலும் 3,245 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் 351, 515 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்தோடு சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 38,413 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 307345 ஆகவும் பதிவாகியுள்ளது.

Hot Topics

Related Articles