உலகம்

இந்தியாவின் சுதந்திர தின விழாவை மூன்று நாட்களுக்கு கொண்டாடடும் அமெரிக்கா!

இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நேற்று நியூயார்க்கின் குயின்ஸ் பரோ நகரில் துவங்கியது.

நியூயார்க்கின் எம்பயர் ஸ்டேட் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இந்திய சுதந்திர தின விழாவையொட்டி, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

புகழ் பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் 25 அடி உயர கம்பத்தில் 60 அடி நீளம் உள்ள இந்திய தேசிய கொடி பறக்க விடப்பட உள்ளது.

இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைநகர் வாஷிங்டன் முதல் நியூயார்க் வரை, நுாற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

நேற்று நியூயார்க்கின் குயின்ஸ் பரோ நகரில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய நகர தலைவர் டோனோவன் ரிச்சர்ட், ‘இந்திய சமூகத்தினரின் பங்களிப்பின்றி குயின்ஸ் நகரம் இந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்திருக்காது என்பதால் இந்தியாவின், 75வது சுதந்திர தின விழாவை மூன்று நாட்கள் கொண்டாட உள்ளோம்,” என தெரிவித்துள்ளார்.

சாம்போர்டு நகரில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் டேவிட் மார்ட்டின் அஹிம்சை வழியில் இந்தியா சுதந்திரம் பெற்றதை பாராட்டி, கவுரவ வாழ்த்து மடல் வெளியிட்டுள்ளார்.

Hot Topics

Related Articles