உலகம்

சர்வதேச பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தினத்தை இலங்கையில் முதல் முறையாகக் கொண்டாடும் ARMX

இலங்கையின் பாதுகாப்புத் தொழிற்துறை வரலாற்றில், முதல் முறையாக, சர்வதேச பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தினமான 2021 ஜுலை 24 ஆம் திகதியை ARMX Security Solutions Private Limited  (ARMX) நிறுவனம் அண்மையில் கொண்டாடியுள்ளது.

பல்வேறு தரப்பட்ட வர்த்தக நிறுவனங்களின் பாதுகாப்புத் துறையில், வாரத்தின் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சேவையைக் கௌரவிக்கும் வகையில், அனைத்து வாடிக்கையாளர் நிறுவனங்களும், இதன் போது, தங்களின் மனமார்ந்த பங்களிப்புக்களை வழங்கியிருந்தன.

இந்த நடவடிக்கையானது, சர்வதேச பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தினக் கொண்டாட்டம் உலகளாவிய ரீதியில் இடம்பெறும் அதே வழிமுறைகளைப் பின்பற்றிய வகையில் இடம்பெற்றுள்ளது. இது, இலங்கையில் ARMX நிறுவனத்தினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேர முறைமாற்று வேலை முறைமைகள், நீண்ட இரவு நேர நடவடிக்கைகள் மற்றும் அதிகபட்ச நேரம் தமது குடும்பங்களை விட்டு விலகியிருத்தல் போன்ற பல்வேறு கடின தேவைப்பாடுகளைக் கொண்ட இந்தத் தொழிற்துறை, எப்போதும் குறைத்து மதிப்பிடப்படும் ஒரு தொழிற்துறையாகவே இருந்து வருகிறது.

இதற்கு மேலதிகமாக, அவர்கள் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள், உளவியல் மற்றும் மன உளைச்சல்களுக்கு உள்ளாகும் நிலைமைகளும் ஏற்படுவதுண்டு. தமது செயற்பாடுகளை உடனடியாக, துரிதமாக மேற்கொண்டு, புன்னகையுடன் மக்களை வரவேற்கும் அவர்களுக்கு, கிடைக்க வேண்டிய கௌரவம் எப்போதுமே கிடைப்பதில்லை.

சர்வதேச வழிமுறைகளைப் பின்பற்றி, ARMX நிறுவனம், இலங்கையில் சர்வதேச பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தினத்தை அனுஷ்டிப்பதை ஆரம்பித்து வைத்துள்ளது. இதன் மூலம், இந்தத் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் அன்புடனும், அரவணைப்புடனும் செயற்பட இலங்கையர்களின் எண்ணங்கள் மாற்றமடையும் என நிறுவனம் எதிர்பார்க்கின்றது. கடும் உழைப்பாளிகளான இவர்களது சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இவ்வாறு அவர்களின் சேவைகளை வரவேற்று அதனை கௌரவிப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு ஊக்குவிப்புக் கிடைக்கிறது.

நம்பகமான பாதுகாப்புத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு நிறுவனம் என்ற ரீதியில், இலங்கையின் போட்டி மிக்க வர்த்தக நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கு ARMX எப்போதும் மிக உயர்ந்த பங்களிப்பைப் பெற்றுக்கொடுக்கிறது. திறனற்ற நபர்களை, நன்கு தேர்ச்சி பெற்ற, பயிற்சி பெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக மாற்றுவது தனது நிறுவனத்தின் ஒரு சேவையாகக் காணப்படுகின்றது.

இலங்கையின் வர்த்தக பாதுகாப்புத் தொழிற்துறை முன்னோடியாக செயற்படும் ARMX நிறுவனம், இத்தொழிற்துறையில் மரியாதையையும், கௌரவத்தையும் மையமாகக் கொண்டு செயற்படும் ஒன்றாகும். நிறுவனத்தின் தொனிப்பொருளான ‘உங்கள் வெற்றியின் மூலமே நாங்கள் வெற்றியடைய முடியும்’ என்ற அடிப்படையில் செயற்படும் நிறுவனம், எப்போதும் தமது வாடிக்கையாளர்களின் சேவைகளை உன்னதமாகக் கருதி செயற்பட்டு வருகின்றது.

நெருக்கடி மிகுந்த, இடர்மிக்க சூழ்நிலைகளுக்குக் கூட 17 வருடங்களுக்கும் கூடுதலான காலம் பாதுகாப்புத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து வரும் ARMX நிறுவனம், வர்த்தக நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, ஒவ்வொரு வர்த்தக நிறுவனத்திற்கெனவும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்புத் தீர்வுகளை வெவ்வேறு விதமாக உருவாக்குவதில் தேர்ச்சி பெற்ற ஒன்றாகும்.

மிகச் சிறந்த, தேர்ச்சி பெற்ற தொழில் நிபுணர்களாக செயற்படும் பாதுகாப்பு உத்தியோகத்;தர்களைக் கொண்டு இந்நிறுவனம், 200 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் 800 க்கும் அதிகமான நிகழ்வுகளுக்கு பாதுகாப்புச் சேவைகளை வழங்கியுள்ளது.

இந்த விடயம் பற்றிக் கருத்து வெளியிட்ட ARMX ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஆரம்பகர்த்தாவான திரு. ஜனக பட்டவளகே, ‘நீங்கள் ஒரு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்தாலும் சரி, பாதுகாப்பு உத்தியோகத்தராக இருந்தாலும் சரி, இருவருமே தமது குடும்பத்தின் பசியைப் போக்க உழைப்பவர்கள்தான் என்பதை மறந்து விடக் கூடாது.

பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கௌரவித்து, அவர்களின் சேவைக்குப் பெறுமதி சேர்க்கும் போது, நிறுவனத்தின் மீது அவர்கள் காட்டும் அன்பும், மரியாதையும் அதிகரிப்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளோம்.

எமது வாடிக்கையாளர்கள், அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு மதிப்பளித்து, அவர்களுக்குரிய வரவேற்பைப் பெற்றுக்கொடுப்பதனால், நிறுவனத்தின் வெற்றிக்கு அவர்கள் காரணமாக செயற்பட்டுள்ளனர் என்பதை நாம் நன்கு உணர்கின்றோம்.

உலகம் முழுவதும் கொண்டாடும் ஜுலை 24 ஆம் திகதியான இந்தத் தினத்தில், இதன் பின் ஒவ்வொரு வருடமும் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் நாடு தழுவிய ரீதியில் கொண்டாடி, அவர்களின் சேவைக்கு எப்போதும் கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்’ என்று கூறினார்.

சீருடை அணிந்த அதிகாரிகள் மூலம், வர்த்தக நடவடிக்கைப் பகுதிகளுக்குப் பாதுகாப்பைப் பெற்றுக்கொடுப்பது முதல், வாடிக்கையாளர் சேவை உட்பட, வாடிக்கையாளர்களுக்கு உரிய வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல், பிரச்சினைகள், சிக்கல்களை முகாமைத்துவம் செய்தல் மற்றும் தீர்வு வழங்குதல், நெருக்கடி நிலைகளின் முகாமைத்துவம், தொலைபேசி ஊடான நடவடிக்கைகள், நடமாடும் சேவைகள், சன நெரிசல் கட்டுப்பாடு, நிகழ்வுகளின் பாதுகாப்பு முகாமைத்துவம், இடர் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சாதாரண உடைகளில் செயற்படும் அதிகாரிகள், கட்டுப்பாட்டு அறை நடவடிக்கை அதிகாரிகள், வாகன நெரிசல் கட்டுப்பாடு, கட்டுமானத்துறை பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை ஆலோசனை மற்றும் பல்வேறுபட்ட சேவைகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபடும் இந்த அதிகாரிகள், எப்போதுமே கௌரவத்தையும் வரவேற்பையும் பெறவேண்டியவர்களாக உள்ளனர்.

Hot Topics

Related Articles