உலகம்

வடக்கு கரோலினாவில் சிக்கிய விசித்திர பற்களை கொண்ட மீன்!

வடக்கு கரோலினாவில் மீனவர்களின் வலையில் மனிதர்களை போல் பற்களை கொண்ட மீன் ஒன்று பிடிபட்டு உள்ளது.

மனிதர்களைப் போல் பற்களை கொண்ட இந்த வகை தடித்த மீன்கள், வடக்கு மற்றும் தெற்கு கரோனாலினா கடற்கரை ஒட்டிய கடல் பகுதியில் இருப்பதாக வடக்கு கரோலினா மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் இவற்றை அரிதாகவே காண முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

latest tamil news

இவற்றின் பற்களும் தாடை அமைப்பும் ஆட்டின் தாடை பற்களையும் ஒத்திருப்பதால் இவை ஆங்கிலத்தில் ஷீப்ஸ்ஹெட் பிஸ் என்றும் அழைக்கப்படுவதாகவும் மினவர்கள் கூறியுள்ளனர்.

இந்த  மீன்கள் சுமார் 1 முதல் 1.5 அடி நீளம் வளரக் கூடியது. இவை நன்கு சண்டையிடும். இவற்றின் சுவையும் நன்றாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீனவர்களினால் பேஸ்புக்கில் பதிவிடப்படடுள்ள இந்த மீனின் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Hot Topics

Related Articles