உலகம்

IDC இன் பிரகாரம் 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் முதல் 5 இடங்களுக்குள் திகழும் vivo

IDC  Worldwide Quarterly Mobile Phone Tracker இன் பிரகாரம், 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் vivo 23.5 சதவிகித சந்தைப் பங்குடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வருடாந்த 23.6 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன், முதன்மை, நடுத்தர மற்றும் உயர்நிலைப் பிரிவுகளை உள்ளடக்கிய அனைத்து விலைப் பிரிவுகளையும் சேர்ந்த தனது தயாரிப்பு வரிசைகளின் உதவியுடன் vivo முதல் நிலையைப் பிடித்ததுள்ளது. தற்போது வரை,  vivo தனது விற்பனை வலையமைப்பை 50 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் விரிவாக்கம் செய்துள்ளதுடன், உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களால் விரும்பப்படுகிறது.

 

IDC2 இன் பிரகாரம் உலகளாவிய ரீதியில், 2021 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் 10.1 சதவீத மொத்த சந்தைப் பங்குடன், உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் 5 இடங்களுக்குள் திகழ்ந்ததுடன், இது முன்னைய ஆண்டை விட 33.7 சதவீத அதிகரிப்பாகும். உள்நாட்டு மனநிலையை பயன்படுத்தல், உள்நாட்டு கலாசாரம் மற்றும் முகாமைத்துவம் பற்றிய புரிதல் ஆகியவற்றுடன், vivo உலகம் முழுவதும் விரிவாக்கமடைந்து வருகின்றது.

 

 

Hot Topics

Related Articles