உலகம்

2021 இன் முதல் அரையாண்டில் SLT குழுமம் நேர்த்தியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

(தொற்றுப் பரவலுடனான காலப்பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு அனுகூலங்களையும் வழங்கியது)

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப, தொலைத் தொடர்பாடல்கள் மற்றும் மொபைல் சேவைகள் வழங்குநரான SLT-MOBITEL, 2021 நிதியாண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபமாக முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 29.9% வளர்ச்சியைப் பதிவு செய்து, 6.0 பில்லியன் ரூபாயை பதிவு செய்துள்ளது.

பரந்தளவில் செலவுக் கட்டுப்பாடுகள், குழுமத்தில் விரயங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், கழிவுகளை பணமாக மாற்றியமை, OPEX செலவுகளை நிர்வகித்திருந்தமை போன்றவற்றினூடாக ஆரோக்கியமான நிதிப் பெறுபேறுகளை எய்தக்கூடியதாக இருந்தது. தொற்றுப் பரவலுடனான காலப்பகுதியில் அதன் வாடிக்கையாளர்கள் அனுகூலம் பெறுவதை SLT-MOBITEL உறுதி செய்திருந்ததுடன், அதற்காக சேவைகளை மேம்படுத்தியிருந்ததுடன், உட்கட்டமைப்பு மற்றும் புத்தாக்கமான தயாரிப்பு வழங்கல்கள் போன்றவற்றையும் மேற்கொண்டிருந்ததாக குழுமம் அறிவித்துள்ளது.

 

SLT குழுமத்தின் வருமானம் ரூ. 49.9 பில்லியனாக அதிகரித்திருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் 13.3%அதிகரிப்பை வருமானம் பதிவு செய்திருந்தது. தொற்றுப் பரவலுடனான சூழலிலும் வியாபாரத் தொடர்ச்சியில் கவனம் செலுத்தியிருந்தமை இதில் முக்கிய பங்காற்றியிருந்தது.

குழுமத்தின் EBITDA (Earnings Before Interest, Tax, Depreciation and Amortisation) என்பது ரூ. 19.6 பில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 10.0% வளர்ச்சியாகும். குழுமத்தின் தொழிற்படு இலாபம் என்பது ரூ. 7.2 பில்லியனாகும். 2020 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 4.2% வளர்ச்சியை பிரதிபலித்திருந்தது.

 

2021 இரண்டாம் காலாண்டுக்கான குழுமத்தின் வருமானம் என்பது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 15.2% இனால் அதிகரித்து ரூ. 25.3 பில்லியனாக பதிவாகியிருந்தது.

EBITDA மற்றும் தொழிற்படு இலாபத்தை முறையே ரூ. 9.9 பில்லியன் மற்றும் ரூ. 3.8 பில்லியனாக அதிகரிக்கச் செய்திருந்தது. குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 3.8 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40.7% வளர்ச்சியாகும்.

 

வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அத்தியாவய பொருட்கள் மற்றும் சேவைகள் விநியோகத்தில் கவனம் செலுத்தியிருந்தமையினால் இலாபத்தில் அதிகரிப்பு பதிவாகியிருந்தது. வதிவிடங்களுக்கான SLT-MOBITEL ஃபைபர் இணைப்புகளை வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்ததுடன், வாடிக்கையாளர்களின் கேள்விகள் அதிகரித்திருந்த நிலையில் PEO TV மற்றும் மொபைல் இணைப்புகளையும் அதிகரித்திருந்தது. இந்த தந்திரோபாயத்தின் காரணமாக, அதிகளவு வாடிக்கையாளர் உள்வாங்கல் பதிவாகியிருந்ததுடன், பெறுமதி சேர் சேவைகள், போட்டிகரமான விலைகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய புத்தாக்கமான சேவைகளான அன்லிமிடெட் டேட்டா பக்கேஜ்கள் அறிமுகம் போன்றனவும் பங்களிப்பு வழங்கியிருந்தன.

 

The Group has also committed to long term infrastructure investments positively impacting the 2021 இன் முதல் அரையாண்டு காலப்பகுதியில் அரசாங்கத்துக்கு தனது பங்களிப்பை SLT குழுமம் தொடர்ந்திருந்தது. ரூ. 10.3 பில்லியனை நேரடி மற்றும் மறைமுக வரிகள் மற்றும் பங்கிலாபங்கள் போன்றவற்றினூடாக செலுத்தியிருந்தது.

இலங்கையில் டிஜிட்டல் இணைப்புத் திறனின் தரத்தில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நீண்ட கால அடிப்படையிலான உட்கட்டமைப்புகளில் முதலீடுகளை மேற்கொள்வதில் குழுமம் அர்ப்பணிப்புகளை மேற்கொண்டிருந்தது. இதில் கடலுக்கு அடியிலான கேபிள் வலையமைப்புகள், உட்கட்டமைப் மற்றும் நாடு முழுவதிலும் ஃபைபர் ஒப்டிக் வலையமைப்பு, 4G கோபுரங்கள் மற்றும் வலையமைப்பு நிலையங்கள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான மூலதன உள்ளீடு போன்றன இதில் அடங்கியுள்ளன.

 

தொற்றுப் பரவல் காலப்பகுதியில் அதன் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மத்தியில் சீரான நிலையை பேணுவதில் ஏனைய நிறுவனங்களுக்கும் SLT குழுமம் முன்மாதிரியாக அமைந்திருந்தது. வைத்தியசாலை அனுமதிக்கான செலவை கட்டுப்படுத்துவதற்கு நிறுவனம் நிதியமொன்றை உருவாக்கியிருந்ததுடன், தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவதற்காக 6 இடைத்தங்கல் நிலையங்களையும் நிறுவியிருந்தது. முற்காப்பு நடவடிக்கைகள் வாராந்தம் கண்காணிக்கப்பட்டதுடன், தொற்றுப் பரவலை இயலுமானவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

 

SLT குரூப் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “SLT-MOBITEL என்பது இலங்கையின் உண்மையான தொலைத்தொடர்பாடல் நிறுவனமாகும். தேசத்துக்கும் மக்களுக்கும் சேவைகளை வழங்க நாம் எம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளோம்.

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பாடல் நிகழ்ச்சிகள் தொடர்பில் அரசாங்கத்துடன் நாம் நெருக்கமாக செயலாற்றுவதுடன், அதனூடாக அனைத்து இலங்கையர்களுக்கும் இணைப்புத்திறனை வழங்கி, டிஜிட்டல் இடைவெளியை இல்லாம் செய்யும் பணிகளை மேற்கொள்கின்றோம்.” என்றார்.

 

SLT குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் SLT-MOBITEL இன் வளர்ச்சி என்பது, எமது சேவைத்தரத்தின் நேரடி பெறுபேறாக வெளிப்பட்டிருந்தது. விலைகளைக் குறைப்பது மற்றும் எமது வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்துவது போன்றவற்றுக்கு வதிவிட வாடிக்கையாளர்களிடமிருந்து பெருமளவு வரவேற்பு கிடைத்துள்ளது.

எமது நிறுவனசார் மற்றும் சிறு வியாபார வாடிக்கையாளர்கள், தொற்றுப் பரவலுடனான சூழலில் தமது வியாபார தொடர்ச்சியை பேணுவதற்கு எம்மில் பெருமளவில் தங்கியிருந்தனர். 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் SLT-MOBITEL வர்த்தக நாம ஒன்றிணைப்பை மேற்கொண்டிருந்ததனூடாக, செலவுகளை குறைத்துக் கொள்ள முடிந்ததுடன், கடுமையான பொருளாதார பின்புலத்தில் சிறந்த தோற்றப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளவும் ஏதுவாக இருந்தது.” என்றார்.

தாய் நிறுவனமான ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி, 2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 3.9 பில்லியை பதிவு செய்திருந்தது. இலாப வளர்ச்சி 14.7% ஆல் அதிகரித்து ரூ. 29.0 பில்லியனாக பதிவாகியிருந்தது.

மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் குழுமத்தின் மொபைல் சேவைகள் பிரிவான மொபிடெல் பிரைவட் லிமிடெட் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. 2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், மொபிடெல் வருமானம் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

புரோட்பான்ட் சேவைகளின் வளர்ச்சி மற்றும் கம்பனியின் வினைத்திறன் வாய்ந்த செயற்பாடுகள் மற்றும் மூலதன செலவுகள் நிர்வாகம் போன்றவற்றினூடாக இந்த வளர்ச்சியை எய்த முடிந்தது. நிறுவனத்தின் வரிக்கு பிந்திய இலாபம் 47.7% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

SLT பிரதம நிறைவேற்று அதிகாரி கித்தி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “SLT-MOBITEL தனது ஃபைபர் விரிவாக்கத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த வண்ணமுள்ளது. அல்ட்ரா வேக Fibre-to-the-Home (FTTH) இணைப்புகளை நாடு முழுவதிலும் பெற்றுக் கொடுக்கும் இலக்குடன் இயங்குகின்றது. மேலும், தற்போதைய 4G வலையமைப்பு விரிவாக்க பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.” என்றார்.

மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரன கருத்துத் தெரிவிக்கையில், “பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டங்கள் பலதில் SLT-MOBITEL தன்னை ஈடுபடுத்தியுள்ளது. கிராமத்துக்கு தொலைத் தொடர்பாடல் (கட்ட சந்நிவேதனய” மற்றும் கம சமக பிலிசந்தர நிகழ்ச்சித் திட்டங்களுடன் கைகோர்த்துள்ளது.

நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களில் இணைப்புத்திறனை ஏற்படுத்தும் TRCSL இன் முயற்சிகளுடன் இணைந்துள்ளது. நாடு முழுவதையும் சேர்ந்த வைத்தியசாலைகளுக்கு குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான “சம்பந்தியாவே சத்காரய” என்பதற்கமைய PCR இயந்திரங்களையும், அத்தியாவசிய மருத்துவ சாதனங்களையும் நன்கொடையாக SLT-MOBITEL வழங்கியிருந்தது.” என்றார்.

 

Hot Topics

Related Articles