உலகம்

நீர்கொழும்பு Amber SKYE சொகுசு வீட்டுத் திட்டத்தில் முதல் 20 நாட்களுக்குள் முழு வீடுகளிலும் 50% விற்கப்பட்டுவிட்டன

 

கடற்கரைக்கு அருகாமையில் Prime Lands Residencies PLCஇன் மூன்றாவது சொகுசு வீட்டுத் தொகுதித் திட்டமான, Amber Skye Residenceies, வாடிக்கையாளர்களின் பாவனைக்காக திறக்கப்பட்டு வெறும் 20 நாட்களுக்குள், திட்டத்தில் 50% வீடுகள் விற்று தீர்ந்துள்ளதுடன், இது இலங்கையில் முதலாவது ஏசைவரயட Virtual Property Launch ஆகும்.

Amber Skye Residencies வீட்டுத் தொகுதியானது, இது முதலீட்டாளர்களுக்கு நீர்கொழும்பில் மிக உயர்ந்த மதிப்புள்ள Hotel Roadஇன் வீட்டு உரிமையையும், ஆடம்பர வாழ்க்கையின் வசதிகளையும் சொகுசு வசதிகளையும் வழங்குகிறது, இது ஏற்கனவே ஏராளமான இலங்கை வாடிக்கையாளர்களையும், உள்ளுர் முதலீட்டாளர்களை ஈர்ப்பதுடன் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Amber Skye Residencies வீட்டு தொகுதியின் கீழ் கட்டப்படவுள்ள மொத்த சொகுசு வீடுகளின் எண்ணிக்கை 145 ஆகும். 1 முதல் 3 படுக்கையறைகளைக் கொண்ட பல்வேறு வகையான வசதிகளுடன் கூடிய வீடுகளை 19.5 மில்லியன் ரூபாவில் இருந்து வாங்க முடியும்.

பிரைம் குழுமம் 2024க்குள் வீட்டுக் கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதுடன் மூன்று வருடங்களுக்குள் பணத்தை செலுத்தி முடிக்கக் கூடிய கவர்ச்சியான வட்டியில்லா தவணை கட்டண திட்டத்தினை Prime Lands Residencies PLCஇனால் வழங்கப்பட்டுள்ளது.

‘வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் இப்போது Amber Skye வீட்டுத் தொகுதியில் வீடுகளை வாங்க விரைகின்றனர், மேலும் இந்த அதிகரித்து வரும் தேவை நீர்கொழும்பை அதன் சுற்றுலா மற்றும் ஆடம்பர வாழ்க்கை சூழலுடன் ஈர்க்கும் ஒரு வலுவான காரணியாகும்.

நகர்ப்புற வசதிகள், ஆடம்பர வாழ்க்கை, தனியுரிமை பாதுகாப்பு, அமைதி மற்றும் கடலின் எல்லையற்ற அழகை அனுபவிக்க Amber Skye சிறந்த இடம் என்பதில் சந்தேகமில்லை. என்னுடைய கருத்துப்படி, சிக்கலான கட்டிடக்கலை அதன் இருப்பிடம் மற்றும் இயற்கையான அழகுடன் கூடிய சூழல் வாழ்க்கைக்கு நெருக்கமாக ஒரு அமைதியை கொண்டு வருவதற்கு மிகவும் முக்கியமாக அமையும்.

கடலுக்கு அருகாமையில் ஒரு சிறந்த சூழலில் வாழ இதுவொரு சிறந்த இடமாகும்.’ என பிரைம் குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராக்மனகே தெரிவித்தார்.

இங்கு நிர்மாணிக்கப்பட்டு வரும் சொகுசு Penthouses வீடுகள் மற்றும் சொகுசு வீடுகளுக்கு இயற்கையான வெளிச்சம் வரக் கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன, புதிய கட்டடக்கலை நுட்பங்களைப் பயன்படுத்தி வீட்டிற்கு அதிக இடத்தை சேர்க்கவும் நவீன வீடுகளுக்கு தேவையான அம்சங்களை சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்து சமுத்திரத்தில் சூரியன் மறையும் போது தென்படும் ஊதா நிற வானம் கண்ணைக் கவரும் காட்சி சந்தேகத்திற்கு இடமின்றி வேறு எங்கும் ஒப்பிடமுடியாத ஒரு அனுபவத்தை மனதில் கொண்டு வரும்.

மேலும், நீர்கொழும்பு கோல்டன் பீச்சின் இருப்பிடமும், சில நிமிடங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லக்கூடிய வசதியும் இந்த சொகுசு அடுக்குமாடி வீட்டுத் தொகுதியின் மற்றொரு அதிநவீன சொகுசு வீட்டுத் திட்டமாக மாற்றும்.

இந்த சொகுசு மாடி வீடுகளின் உரிமையாளர்களுக்கு தினசரி 24 மணி நேர வரவேற்பு சேவைகள், விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடவசதி, திறந்த மாடி நீச்சல் குள வசதிகள், குழந்தைகளுக்கான நீச்சல் குள வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானம், யோகா பயிற்சி கூடம், தொலை தூரத்தை ரசிக்கக் கூடிய தொலைநோக்கி வசதி, உடற்பயிற்சி கூடம், BBQ Terrace, உடற்பயிற்சி உணவகம் மற்றும் சந்திப்பு மையம், அத்துடன் சாரதிகளுக்கான ஓய்வு பகுதி, ஆகியன Amber Skye Residencies வீட்டு மாடி கட்டடத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வளாகத்தில் பணியாளர்கள் குடியிருப்பு, சலவை வசதிகள், டிஜிட்டல் கண்காணிப்பு கேமரா அமைப்புடன் 24 மணி நேர பாதுகாப்பு, மின்சார கார் சார்ஜிங் நிலையங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டி நிறுத்துவதற்கான வசதிகளும் உள்ளன.

சுவையான உணவை அனுபவிக்கக்கூடிய பல நட்சத்திர சுற்றுலா ஹோட்டல்களுக்கு அருகில் அமைந்துள்ளதுடன், வரலாற்று சிறப்பு மிக்க நீர்கொழும்பில் சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவர்ந்துள்ள முகத்துவார ஈரநிலங்கள், அத்துடன் நீர்கொழும்பு  ஒல்லாந்தர்களின் கோட்டை, மாஓயா, ஒல்லாந்தர்களின் மணிக்கூட்டுக் கோபுரம், மொரவல கடற்கரை போன்ற இடங்களுக்கு மிக விரைவாக செல்லவும் முடியும்.

.

Hot Topics

Related Articles