உலகம்

பாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்

 

பாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட தூதுவர் எச். ஈ.நாவலகே பென்னட் குரே இன்று செவ்வாய்க்கிழமை, பாலஸ்தீனத்தின் ரமல்லாவில் உள்ள அமைச்சகத்தில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ரியாட் அல் மால்கியிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார்.

இரு நட்பு நாடுகளுக்கு இடையிலான வரலாற்று மற்றும் நீண்டகால உறவுகளின் ஆழத்தை அமைச்சர் அல் மால்கி பாராட்டினார்.

குறிப்பாக பாலஸ்தீன சர்வதேச ஒத்துழைப்பு முகமை (PICA) யின் திட்டங்கள் மற்றும் பாலஸ்தினத்தின் நாப்ளஸிலுள்ள மகிந்த ராஜபக்ச தொழிற்பயிற்சி மையம் போன்ற இலங்கை திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதன் மூலம் மேம்பாட்டுத் துறைகளில் தனது அரசாங்கம் அதிக ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது என்று அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

நிகழ்வில், அரசியல் அரங்கில் சமீபத்திய முன்னேற்றங்கள், ஜெருசலேம் மற்றும் சமாதான செயல்முறையை புதுப்பிக்கும் சர்வதேச முயற்சிகள் போன்றவற்றையும் இலங்கை தூதுவரிடம் அமைச்சர் அல்-மால்கி விளக்கினார்.

இதையொட்டி, தூதுவர் நாவலகே பென்னட் குரே, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனா ஆகியோரின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தவும் வளர்த்துக்கொள்ளவும், ஏனைய பகுதிகளுக்கு மேலும் விரிவுபடுத்தவும் பணியாற்றுவார் என்று நாவலகே வலியுறுத்தினார்.

Hot Topics

Related Articles