உலகம்

“நாங்க வேற மாரி.. “- வைரலாகும் வலிமை படத்தின் முதல் பாடல்

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் முதல் பாடலை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.

யூடியூபில் வெளியான ஒரு மணி நேரத்தில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து வலிமை பட அப்டேட் காக காத்திருந்த ரசிகர்களினால் இந்த பாடல் ட்ரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.

“நாங்க வேற மாரி.. வேற மாரி.. வேற மாரி” என வித்தியாசமான பாடல் வரிகளுடன் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் குரலும் படத்திற்கு மேலும் வலிமை சேர்த்திருக்கிறது.

திருவிழா ஒன்றில் அஜித்தின் அறிமுகப் பாடலாக அமைந்துள்ள, இப்பாடல் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது.

ஹெச் வினோத் இயக்கத்தில்,நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பிறகு மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை.வலிமை படத்தில் பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி கதாநாயகியாக நடித்துள்ளார்.

அஜித்தின் பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்த இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கும் இசை அமைத்திருக்கிறார்.

“நாங்க வேற மாரி” பாடல் மூலம் வலிமை படத்தில் பாடலாசிரியராக விக்னேஷ் சிவன் அவதாரம் எடுத்திருக்கிறார்

தீனா ,பில்லா ,ஏகன் ,மங்காத்தா, ஆரம்பம் ,நேர்கொண்ட பார்வை என நடிகர் அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் எல்லாவற்றுக்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைத்திருக்கிறார்.

எதிர்பாராத விதமாக பாடலையும் வெளியிட்டு அஜித் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளனர் படக் குழுவினர்.

இந்த வலிமை திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன்,தெருக்குரல்,அறிவு, கவிஞர் தாமரை உள்ளிட்டோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இந்தப்படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

தற்போது படத்திற்கான விளம்பர பணிகளில் இறங்கியுள்ளது படக்குழு.மோஷன் போஸ்டரை அடுத்து, தற்போது நாங்க வேற மாரி என்ற முதல் பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

வலிமை பட முதல் பாடலை அஜித் ரசிகர்கள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Hot Topics

Related Articles