உலகம்

DFCC வங்கிக்கு இலங்கையில் அனைத்து சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களையும் உள்வாங்கிய வளர்ச்சியை முன்னெடுக்க உதவுவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை அமெரிக்கா வழங்கியுள்ளது

150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியுடன் இலங்கையின் பொருளாதாரத்தின் மீள் எழுச்சிக்கு அமெரிக்கா பங்களிக்க முன்வந்துள்ளது. நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உள்நாட்டு தொழில் முயற்சிகள் மற்றும் இலங்கையில் பெண்களால் முன்னெடுக்கப்படும் தொழில் முயற்சிகள் ஆகியவற்றுக்காக இரு தரப்பு கடன் வசதியாக DFCC வங்கிக்கு அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்திடமிருந்து (U.S. International Development Finance Corporation – DFC) இடமிருந்து இக்கடன் வசதி கிடைத்துள்ளது.

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்திடமிருந்து (U.S. International Development Finance Corporation – DFC) வழங்கப்பட்டுள்ள கடன் வசதியானது இது வரையில் DFC இலங்கைக்கு வழங்கியுள்ள மிகப்பெரிய கடன் தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலும் சமூகங்களுக்கு வலுவூட்டுவதற்கான DFC இன் பரந்த நோக்கங்களுக்கு இக்கடன் பங்களிப்பதுடன், பாலின சமத்துவமின்மை மற்றும் பொருளாதார சமத்துவமின்மை போன்ற பாரதூரமான பிரச்சனைகள் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக மேலும் அதிகரித்துள்ள நிலையில் அவற்றைக் கையாளும் நோக்கத்துடன் இவை வழங்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டாண்மை மூலம், கடன் வழங்கும் நோக்கத்தில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டிய துறைகளுக்கு விரிவான மற்றும் மாறுபட்ட கடன் வழங்கும் தீர்வுகளை வழங்கும் திறனை DFCC வங்கி பெற்றுள்ளது. இது ஐக்கிய நாடுகளின் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை மேம்படுத்தும் நாட்டின் முயற்சிகளுக்கு, குறிப்பாக இலக்கு 5: பாலின சமத்துவத்தை அடைவதற்கு உதவுவதற்கான அதனது அர்ப்பணிப்பிற்கு இது உதவுகின்றது. இதனை அடைவதற்கு கடன் வசதிகளின் ஒரு பகுதியானது பெண்களால் முன்னெடுக்கப்படுகின்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு பிரதானமாக அளிக்கப்படவுள்ளதுடன், பெண் தொழில் முயற்சியாண்மையை முன்னெடுப்பதே இதன் பிரதான இலக்கு. இந்த முயற்சி பெண் தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றான மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான கடன் வசதி அதன் காரணமாக மூலதன பற்றாக்குறை மற்றும் குறைந்த வணிகத் திறன் தொடர்பாக முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளைக் கையாளும்.

அமெரிக்கா வழங்கியுள்ள இந்த நிதி, வங்கியின் பன்முக, பல-கருப்பொருள் கொண்ட நீண்ட கால இலக்கு 2030 ஐ அடைய அதன் ‘வணிக மீள் எழுச்சி’ மூலோபாயப் பிரிவின் கீழ் உதவும். DFCC வங்கி தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவுவதோடு, அடுத்து வரும் ஆண்டுகளில் அதனது சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நிதி ஆகிய முத்தரப்பு பெறுமானத் தோற்றுவிப்பு கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற அனைவரையும் உள்வாங்கும் மையப்படுத்தப்பட்ட முயற்சிகள் அனைத்து பங்குதாரர்களுக்கும் பயனளிக்கும். Alpen Capital (ME) Limited இப் பரிவர்த்தனைக்கு நிதி ஆலோசகராக செயல்பட்டுள்ளது.

 

Hot Topics

Related Articles