உலகம்

மக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்!

மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் சீர்திருத்த நடவடிக்கை களை, பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் மேற்கொண்டு வருகிறார். முஸ்லிம் பழைமைவாத கொள்கைகளை மாற்றி வருகிறார்.

பெண்களுக்கு அதிக அதிகாரம், சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இராணுவத்திலும் பெண்கள் அதிகளவில் சேர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மக்கா மற்றும் மதீனாவில், பாதுகாப்புப் பணியில், இராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த, ஏப்.,ல் இருந்து இவர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.


மக்காவில், பாதுகாப்புப் பணியில், இராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Hot Topics

Related Articles