உலகம்

பவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா? – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை!

நடிகை வனிதா விஜயகுமார் படங்களில் நடித்து பிரபலமானதைவிட சர்ச்சைகள் மூலமாக தான் அதிகம் பிரபலமாகியுள்ளார்.

ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வனிதா 4-வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு வனிதா மறுப்பு தெரிவித்தார்.

எனினும் வனிதா விஜயகுமார் S என்ற எழுத்தில் துவங்கும் பெயர் கொண்டவருடன் 4வது திருமணம் செய்து கொள்வார் எனவும், அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுவார் எனவும் பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியிருந்தார்.

இதனிடையே நடிகை வனிதா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துகள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

எனவே, இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா? என கமெண்டுகளில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், இது கண்டிப்பாக வனிதா நடிக்கும் ஒரு புதிய படத்தின் புரமோஷன் என்றுதான் பலராலும் கருதப்பட்டு வருகிறது.

Hot Topics

Related Articles