உலகம்

2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது!

2032 ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடை பெற்ற உள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இன்று அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிரபல சர்வதேச கிரிக்கெட் மைதானமான காப்பா ஸ்டேடியம் ஒலிம்பிக்கிற்காக மாற்றி அமைக்கப்பட்டு, அங்கு தொடக்க நிகழ்ச்சி, முடிவுரை நிகழ்ச்சி, தடகள போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய இதற்கு முன்னர் 2 முறை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியுள்ளது.
1956ம் ஆண்டு மெல்பேர்ன் நகரத்திலும், 2000ம் ஆண்டு சிட்னியிலும் போட்டிகள் நடைபெற்றனர். தற்போது 3வது முறையாக 2032 இல் பிரிஸ்பேனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை பெற இந்தியா, இந்தோனேஷியா, கத்தார், ஜெர்மணி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் முணைப்பு காட்டியது.

2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எதிர் வரும் 23 ஆம் திகதி டோக்கியோ நகரத்தில் நடைபெறவுள்ள நிலையில், 2024ம் ஆண்டு ஒலிம்பிக்கை பாரிஸ் நகரத்தில் நடைபெறவுள்ளது.

அதே போல 2028ம் ஆண்டு போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

Hot Topics

Related Articles