உலகம்

சீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி!

சீனாவின் மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள நிலைமையால் சுரங்கப் பாதையில் பயணித்த ரயிலொன்று வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த ரயிலுக்குள் பயணிகளின் கழுத்து வரையில் வெள்ள நீர் காணப்படுவதாகவும், அதிலுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சீன ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நகரத்தின் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டதாக ஜெங்ஜோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ரயிலில் சிக்கியிருந்த 500 க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர், ஆனால் சுரங்கப்பாதை நிலையங்களுக்கு தொடர்ந்து வெள்ள நீர் மட்டம் உயர்வடைந்து வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனிக்கிழமையன்று தொடங்கிய கன மழை, காரணதாக இதுவரை குறைந்தது 18 உயிரிழந்துள்ளனர்.

ஹெனனின் மாகாண தலைநகரில் 200,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

Hot Topics

Related Articles