உலகம்

தனது 14 மற்றும் 12 வயதான மகள்களை கர்ப்பமாக்கிய தந்தை – இலங்கையில் கொடூரம்!

இலங்கை பதுளை, எல்ல தெமோதர பகுதியில் தந்தை ஒருவர் தனது இரு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதி கர்ப்பமாக்கியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

37 வயதுடைய தந்தை ஒருவரே இவ்வாறு தனது 14 மற்றும் 12 வயதான மகள்களை கர்ப்பமாக்கி உள்ளார்.

14 வயதுடைய மகளை வயிற்று வலி காரணமாக அவருடைய தாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற சந்தர்ப்பத்தில் அவர் கர்ப்பமுற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தனது தந்தையினால் இவ்வாறு கர்ப்பமுற்று இருப்பது தெரியவந்துள்ளது. அத்தோடு சிறுமியின் இளைய சகோதரியும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சிறுமியின் இளைய சகோதரி மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது அவரும் கர்ப்பமுற்று இருப்பது தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து தலைமறைவாகி உள்ள குறித்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Hot Topics

Related Articles